அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் உள்ள பிரபல உணவகம் ஒன்றுக்கு மன்னார் நகர சபை காலவரையின்றி மூடுவிழா.

மன்னாரில் உள்ள பிரபல உணவகம் ஒன்றுக்கு மன்னார் நகர சபை  காலவரையின்றி மூடுவிழா.



மன்னார் பஸார் பகுதியில் அமைந்துள்ள பிரபல உணவகம் ஒன்றை இன்;று திங்கட்கிழமை காலை மன்னார் நகர சபையின் சுகாதார பிரிவினர் காலவரையின்றி மூடியுள்ளதாக  மன்னார் நகர சபை உறுப்பினர் எஸ். குமரேஸ் தெரிவித்தார்.

மன்னார் பஸார் பகுதியில் அமைந்துள்ள பிரபல உணவகம் ஒன்றின் மலசல கூடத்திற்கான மலக்கழிவுகள் உணவகத்திற்கு முன்பாகவுள்;ள   கழிவு நீர் கால்வாயினுள் செலுத்தப்படுவதாக மன்னார் நகர சபைக்கு வழங்கப்பட்ட முறைப்பாடு   மன்னார்; நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசத்தின் பணிப்புரைக்கு அமைவாக   குறித்த உணவகத்திற்கு இன்று திங்கட்கிழமை காலை 10.30 மணியளவில் சென்ற மன்னார் நகர சபையின் செயலாளர் லெனாட் பிரிட்டே தலைமையில் உப தலைவர் ஜேம்ஸ் ஜேசுதாஸ்இநகர சபை உறுப்பினர்கள்இநகர சபை அதிகாரிகள் சென்று குறித்த உணவகத்தை   பரிசோதனை செய்தனர்.

இதன் போது குறித்த உணவகத்தின் மலசலக்கூடம்; உணவகத்தின் உற்பகுதியில் அமைந்துள்ள நிலையில் மலக்கழிவுகள் உணவகத்திற்கு முன்பாகவுள்ள   கழிவு நீர் கால்வாயினுள் கலக்கப்பட்டமை ஆரம்ப கட்ட விசாரனையின் மூலம் தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில் மன்னார் நகர சபை அதிகாரிகள் உடனடியாக குறித்த உணவகத்தை மூடுமாறு பணிப்புரை விடுத்துள்ளார்.

மேலதிக நடவடிக்கையினை மன்னார் நகர சபை மேற்கொண்டு வருவதோடு குறித்த உணவகம் மூடப்பட்டமைக்கான காரணத்தை   எழுத்து மூலம் குறித்த உணவகத்தின் உரிமையாளருக்கு அனுப்பிவைத்துள்ளனர்.




மன்னாரில் உள்ள பிரபல உணவகம் ஒன்றுக்கு மன்னார் நகர சபை காலவரையின்றி மூடுவிழா. Reviewed by Author on November 18, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.