ஒருநாள் மீன்பிடிக்கான இந்தியாவின் கோரிக்கையை இலங்கை நிராகரிப்பு
இலங்கை கடல் எல்லையில் தமிழக மீனவர்கள் வாரத்தில் ஒருநாள் மீன்பிடிக்க அனுமதிக்கப்பட
வேண்டும் என்று இந்தியா விடுத்த கோரிக்கையை இலங்கை நிராகரித்துள்ளது .
இந்திய உயர்ஸ்தானிகரக அதிகாரிகளுக்கும் இலங்கையின் கடற்றொழில் அமைச்சு அதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே இந்த யோசனையை இலங்கை நிராகரித்துள்ளது .
எனினும் இது தொடர்பில் இலங்கையின் கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்னவோ அல்லது இந்திய உயர்ஸ்தானிகரக அதிகாரிகளோ கருத்துக்கூற மறுத்துவிட்டனர் .
இந்திய அரசாங்கத்தின் கோரிக்கை யாழ்ப்பாணத்தில் உள்ள மீனவர்களிடம் முன்வைக்கப்பட்டபோது அதனை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது .
இதனையடுத்தே இலங்கை அரசாங்கம் இந்திய அரசாங்கத்தின் கோரிக்கையை நிராகரித்துள்ளது .
தமிழகத்தின் கொந்தளிப்பை தணிக்கும் வகையிலேயே இந்திய மத்திய அரசாங்கம் இந்த யோசனையை முன்வைத்தது .
எனினும் ஒருநாள் தமது கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட தமிழக மீனவர்களை அனுமதித்தால் அவர்கள் தமது முழு மீன் வளங்களையும் நாசப்படுத்தி விடுவர் என்று உள்ளூர் மீனவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர் .
இந்தநிலையில் அண்மையில் யாழ்ப்பாணத்துக்கு சென்றிருந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை தூதரும் தமிழக மீனவர்களின் கடல் அத்துமீறல் தொடர்பில் விமர்சனங்களை வெளியிட்டிருந்தார் .
எனினும் இலங்கை அரசாங்கம் இன்னும் ஐரோப்பிய ஒன்றியத்திடம் தமிழக மீனவர்களின் அத்துமீறல் தொடர்பில் முறைப்பாடுகளை மேற்கொள்ளவில்லை .
ஒருநாள் மீன்பிடிக்கான இந்தியாவின் கோரிக்கையை இலங்கை நிராகரிப்பு
Reviewed by Author
on
November 04, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment