அண்மைய செய்திகள்

recent
-

விசா விதி' பற்றி நான் அறிந்திருக்கவில்லை: ஜெயபாலன்

இந்தியா மற்றும் ஐரோப்பா போன்ற நாடுகளுக்கு தான் சுற்றுலா விசாவில் செல்லும்போது உரை நிகழ்த்தியிருப்பதாகவும், அங்கெல்லாம் இதற்கான 'ஜனநாயக வெளி' இருக்கிறது என்றும் கூறிய கவிஞரும் நடிகருமான வ.ஐ.ச.ஜெயபாலன் இலங்கையில் இது அனுமதிக்கப்படுவதில்லை என்பதைத் தான் உணர்ந்திருக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

இலங்கையில் விசா விதிகளை மீறி பொது நிகழ்ச்சிகளில் பேசியதாக தடுத்து வைக்கப்பட்ட தமிழ்க் கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன், ( செவ்வாய்க்கிழமை ) இலங்கையிலிருந்து நோர்வேக்கு நாடு கடத்தப்பட்டார்.

நோர்வேக்கு திரும்பியதன் பின்னர்; பிபிசி தமிழோசைக்கு கருத்து தெரிவித்த போதே  அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,

தான் யாழ்ப்பாணத்திலிருந்து தனது சொந்த ஊரான வடகாடுக்கு சென்று தனது தாயாரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த சென்று கொண்டிருக்கையில், பயங்கரவாதத் தடுப்புப் பொலிசாரால் தடுத்து நிறுத்தப்பட்டதாகத் தெரிவித்தார்.

ஆனால் தாயாரின் நினைவிடத்துக்கு செல்லாமல் திரும்பமாட்டேன் என்று தான் கூறி சாலையில் அமர்ந்து போராடிய பின்னர், தன்னை தாயின் நினைவிடத்துக்குச் செல்ல அவர்கள் அனுமதித்தனர் என்று அவர் கூறினார்.

ஆனால் விசா விதிகளை மீறியதான குற்றச்சாட்டு குறித்து பதிலளித்த அவர், இந்தியா மற்றும் ஐரோப்பா போன்ற நாடுகளில் தான் சுற்றுலா விசாவில் செல்லும்போது இது போன்று உரை நிகழ்த்தியிருப்பதாகவும், அங்கெல்லாம் இதற்கான 'ஜனநாயக வெளி' இருக்கிறது என்றும் கூறினார்.

ஆனால் இலங்கையில் இது அனுமதிக்கப்படுவதில்லை என்பதைத் தான் உணர்ந்திருக்கவில்லை என்றார். மேலும் இலங்கையில் தன்னை ஒரு வெளிநாட்டவராகவும் தான் கருதவில்லை.

ஆனால் தன்னைப்பற்றி இலங்கை அமைச்சர்கள் பஷீர் ஷேகு தாவுத் மற்றும் ரவுப் ஹக்கீம் ஆகியோர் சாதகமான கருத்துக்களை தந்திருக்கின்றனர் என்றார் அவர்.

தான் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது மன உளைச்சல் இருந்தது ஆனால் உடல் ரீதியாகத் துன்புறுத்தப்படவில்லை என்றார் அவர். 
விசா விதி' பற்றி நான் அறிந்திருக்கவில்லை: ஜெயபாலன் Reviewed by Author on November 28, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.