2014 ஆம் ஆண்டிற்கான மன்னார் நகர சபையின் வரவு செலவு திட்டம் மக்கள் பார்வைக்காக
குறித்த கூட்டத்தில்; சபையின் தலைவர் திரு.எஸ்.ஞானபிரகாசம், உபதலைவர் திரு.ஜேசுதாசன், செயலாளர் திரு.எக்ஸ்.எல்.ரெனால்ட் மற்றும் ஏனைய நகரசபை உறுப்பினர்கள் 5 பேரும் பங்குபற்றினர்.
குறித்த கூட்டத்தின் போது சபையின் தலைவர் 2014ம் ஆண்டிற்கான வரவுசெலவதிட்டததினை; சபையில்; முன்வைத்தார்.
இதனை அடுத்து சபை உறுப்பினர்கள் யாவராலும் விவாதிக்கப்பட்டு பின்னர் சபை உறுப்பினர்களால் ஏக மனதாக அங்கிகரிக்கப்பட்டது.
இதேவேளை குறித்த வரவு செலவுதிட்டம் மக்களின் பார்வைக்காக உட்படத்த தீர்மானிக்கப்பட்ட நிலையில் அது மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. என சபையின் உறுப்பினர் திரு.எஸ் .ரெட்ணசிங்கம் குமரேஸ் தெரிவித்தார்.
மேலும் இப்பாதீட்டில் மன்னார் நகர சபையின் 2014ம் ஆண்டிற்கான மொத்த வருமானமாக ரூபா82,021,360,00வும்
மொத்த செலவீனமாக ரூபா. 82,019,,800.00வும் ,
வருமான மிகையாகரூபா 1,560.00வும் மதீப்பீட செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் சபையின் நிர்வாக செலவீனங்களக்காக ரூபா 18,791,800.00 வும்
சுகாதார சேவைகளுக்காக ரூபா 19,025,500.00 வும்
பௌதீக திட்டமிடலுக்காக ரூபா. 11,532,100.00 வும்
தண்ணீர் சேவைக்காக ரூபா.5,326,700.00 வும்
பொதுப்பயன்பாட்டு சேவைக்காக ரூபா. 1,549,200.00 வும்
நலன்புரி சேவைகளுக்கும் வசதிகளுக்குமாக ரூபா. 3,194,500.00 வும்
மூலதன செலவீனங்களக்காக ரூபா. 22,600,000.00 என்ற ரீதியில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த சபையின் உறுப்பினர் ரெட்ணசிங்கம் குமரேஸ் மேலும் தெரிவிக்கையில்
மக்களின் நலன்கருதி குறித்த பாதீடானது காட்சிபடுத்தப்பட்டுள்ளதாகவும். குறித்த பாதீட்டை அலுவலக நேரங்களில் மக்கள் பார்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
2014 ஆம் ஆண்டிற்கான மன்னார் நகர சபையின் வரவு செலவு திட்டம் மக்கள் பார்வைக்காக
Reviewed by Author
on
November 28, 2013
Rating:

No comments:
Post a Comment