முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள மூன்று குளங்கள் புனரமைப்பு.
முல்லைத்தீவு முத்தையன் கட்டு நீர்ப்பாசனத் திணைக்ளத்தின் கீழ் உள்ள பிரதான மூன்று குளங்கள்
புனரமைக்கப்பட்டு வருகின்றன .
உடையார் கட்டு குளம் 195 மில்லியன் ரூபா செலவிலும் விசுவமடுக்குளம் 85 மில்லியன் ரூபா செலவிலும் மருதமடுக்குளம் 89 மில்லியன் ரூபா செலவிலும் புனரமைக்கப்பட்டு வருகின்றன .
வன்னியில் மக்களின் மீள்குடியமர்வின் பின்னர் முரண்பாடுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்தில் பல குளங்கள் புனரமைக்கப்பட்டு வருகின்றன .
அதனடிப்படையில் உடையார்கட்டுக் குளம் சுமார் 195 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டு வருகின்றது .
இக்குளம் புனரமைக்கப்படுவதன் மூலம் இதன்கீழ் உள்ள 950 ஏக்கர் நிலப்பரப்பில் நெற்செய்கை மேற்கொள்ளக்கூடியதாக இருக்கும் .
இதேபோன்று விசுவமடுக்குளப் புனரமைப்பின் மூலம் சுமார் 800 ஏக்கர் வரையான நிலப்பரப்பில் சிறுதானியம் மற்றும் தோட்டச் செய்கையை மேற்கொள்ளக்கூடியதாக இருக்கும் .
இதேபோன்று மருதமடுக் குளம் கடந்த 2008 ஆம் ஆண்டு உடைப்பெடுத்து காணப்பட்டதுடன் அதன் கட்டுமானங்களும் சேதமடைந்து காணப்பட்டன . இதனையடுத்து தற்போது இக்குளத்தின்புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன .
இக்குளம் புனரமைக்கப்படுவதின் மூலம் மருதமடு , கோம்பாவில் , கைவேலி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சுமார் , நானூற்றி ஐம்பதுக்கு மேற்பட்ட விவசாயிகள் நன்மையடைவார்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது .
முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள மூன்று குளங்கள் புனரமைப்பு.
Reviewed by Admin
on
December 19, 2013
Rating:
Reviewed by Admin
on
December 19, 2013
Rating:


No comments:
Post a Comment