அண்மைய செய்திகள்

recent
-

தெற்காசியாவின் மிக உயரமான கிறிஸ்மஸ் மரம் கிளிநொச்சியில் (photos)

தெற்காசியாவின் மிகவும் உயரமான கிறிஸ்மஸ் மரம் கிளிநொச்சியில் தயாரிக்கப்பட்டுள்ளது. 116 அடி உயரம் கொண்ட இந்த சிறப்பு வாய்ந்த கிறிஸ்மஸ் மரமானது, 75க்கும் மேற்பட்ட படையினர் தயாரித்துள்ளனர். 

 50 அடி விட்டமும் 116 அடி அகலமும் கொண்டதாகவும், 59,000 மின் குழிழ்களை கொண்டதாகவும் இந்த கிறிஸ்மஸ் மரம் தயாரிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு படையினரால் கிளிநொச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாபெரும் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டே இந்த கிறிஸ்மஸ் மரம் தயாரிக்கப்பட்டுள்ளது. 

 இதன்படி இன்று முதல் எதிர்வரும் 22ஆம் திகதி வரை இந்த கிறிஸ்மஸ் கொண்டாட்டம் இடம்பெறவுள்ளது. 

 கரோல் கீதங்கள், கிளிநொச்சி மாணவர்களுக்கான புலமைப் பரிசில்கள், ஒரு மில்லியன் பெறுமதியான இறக்குமதி செய்யப்பட்ட 3 பந்தைய சைக்கிள்கள் வழங்கல், உள்ளிட்ட நிகழ்வுகளோடு மாபெரும் இசை நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


தெற்காசியாவின் மிக உயரமான கிறிஸ்மஸ் மரம் கிளிநொச்சியில் (photos) Reviewed by Admin on December 21, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.