திருக்கேதீஸ்வரம் மாந்தை பகுதியில் மனித எச்சங்கள் மீட்ப்பு -படங்கள்
மாந்தை பகுதியில் மனித எச்சங்கள் சில இனறு மீட்க்கப்பட்டுள்ளது. இன்று மாலை 3 மணியளவில் மாந்தை சந்தியிலிருந்து திருக்கேதீஸ்வரம் செல்லும் பாதையில் 50 மீற்றர் தூரத்தில் பாதையின் அருகே நீர் வடிகாலமைப்பிற்காக தண்ணீர் குழாய்கள் பதிக்கும் வேலைகள் நடைபெற்றுள்ளது.
இதன் போது வீதியின் அருகில் குழாய்கள் பதிப்பதற்கான வேலைகள் செய்வதற்கென நிலம் ஆளமாக்கப்பட்டுள்ளது.
இதன்போது நிலத்திற்கடியில் மனித எலும்பு எச்சங்கள் சில கணப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து குறித்த வேலையில் ஈடுபட்டிருந்தவர்கள் இது தொடர்பாக தமது உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்த நிலையில் குறித்தவிடயம் இராணுவம் மற்றும் மன்னார் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டள்ளது.
இதனை அடுத்து குறித்த பகுதியிற்கு சென்ற பொலிசார் விசாரனைகளை மேற்கெண்டு வருகின்றனர். குறித்த பகுதியியில் தற்பொழுது பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் பல மனித எலும்பு எச்சங்கள் மீட்க்கப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த பகுதியில் மேலும் பல மனித எச்சங்கள் காணப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை சம்பவ இடத்திற்கு இன்று மாலை சென்ற வட மாகாண போக்குவரத்து மற்றும் வாணிப அமைச்சர் பா.டெனிஸ்வரன் , வட மாகாண சபை உறுப்பினர் பிறிமுஸ் சிராய்வா மற்றும் மன்னார் பிரதேச சபையின் உபதலைவர் சாகாயம் ஆகியோர் சம்பவ இடதிற்கு நேரில் சென்று பார்வையிட்டதோடு குறித்த விடயம் தொடர்பாக பொலிசாருடன் கலந்துரையாடினர்.
நாளை குறித்த மனித எச்சங்களை அகழ்ந்து எடுப்பதற்கான பணிகள் நடைபெறவுள்ளது என தெரியவருகிறது.
குறித்த பகுதி கடந்த காலங்களில் அதியுயர் பாதுகாப்பு வலயமாக காணப்பட்டதோடு தற்போது குறித்த பகுதி இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.
சற்று தொலைவில் பண்சலை ஒன்றும் காணப்படுகின்றது.
இதேவேளை குறித்த பகுதியிற்கு செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்கள் இராணுவத்தினரால் விசாரிக்கப்பட்டு குறித்த ஊடகவிலளர்களின் ஊடக அடையாள அட்டையினை இராணுவத்தினர் புகைப்படம் எடுத்ததுடன் ஊடகவியலாளர்களையும் புகைப்படமெடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது
திருக்கேதீஸ்வரம் மாந்தை பகுதியில் மனித எச்சங்கள் மீட்ப்பு -படங்கள்
Reviewed by Author
on
December 20, 2013
Rating:

No comments:
Post a Comment