அண்மைய செய்திகள்

recent
-

திருக்கேதீஸ்வரம் பகுதியில் மனித எச்சங்களை தேடும் பணி தொடர்கிறது...- படங்கள் - விசேட செய்தி


திருக்கேதீஸ்வரம் பகுதியில் மனித எச்சங்களை தேடும் பணி தொடர்கிறது......

நேற்று திருக்கேதீஸ்வரம் பகுதியில் சில மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து இன்று எச்சங்ககை தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது.

திருக்கேதீஸ்வரம்  மாந்தை பகுதியில் மனித எச்சங்கள் சில நேற்று மீட்க்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இன்று சனிக்கிழமை காலை குறித்த இடத்திற்கு சென்ற மன்னார் மாவட்ட நிதிபதி ஆனந்தி கனகரெட்ணம் சம்பவம் தொடர்பான விசாரனைகளை மேற்கொண்டார்

மாந்தை சந்தியிலிருந்து தீருக்கோதீஸ்வரம் செல்லும் பாதையில் 50 மீற்றர் தூரத்தில் பாதையின் அருகே நேற்று நீர் வடிகாலமைப்பிற்காக தண்ணீர் குழாய்கள் பதிக்கும் வேலைகள் நடைபெற்றது இதன் போது குறித்த பகுதியில் மனித எச்சங்கள் சில கண்டுபிடிக்கப்பட்டது.


இதனை தொடர்ந்து குறித்த வேலையில் ஈடுபட்டிருந்தவர்கள் இது தொடர்பாக தமது உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்த நிலையில் குறித்தவிடயம் மன்னார் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது
 இதனை அடுத்து குறித்த பகுதியிற்கு சென்ற பொலிசார் விசாரனைகளை மேற்கெண்டிருந்தனர். இன்நிலையில் குறித்த பகுதியில் நேற்று பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.


இன்நிலையினை அடுத்து இன்று சனிக்கிழமை காலை சம்பவ இடத்திற்கு சென்ற மன்னார் மாவட்ட நீதிபதி ஆனந்தி கணகரெட்ணம் சம்பவம் தொடர்பான விசாரனைகளை மேற்கொண்டார்.

இதன் போது மனித எச்சங்களை அகழ்ந்து எடுக்கும் பணிகள் விசேட தடயங்களை கண்டறியும் பொலிசாரின் உதவியுடன் குறித்த பகுதியில் நடைபெற்றது.

இதன் பொது மேலும் சில மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் குறித்த இடத்தினை பெக்கோ இயந்திரத்தின் உதவியுடன் எச்சங்களை தேடும் பணியினை தொடர்வதற்கு எற்ப்பாடு செய்யப்பட்டு வருகிறது.

இதேவேளை சம்பவ இடத்திற்கு இன்று காலை சென்ற வட மாகாண சபை உறுப்பினர் பிறிமுஸ் சிராய்வா மற்றும் மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை செபமாலை, மன்னார் பிரதேச சபையின் உபதலைவர் சாகாயம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டனர்
எச்சங்ககை மீட்க்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இது இவ்வாறிருக்க மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ள பகுதியில் 'தொல் பொருள் ஆராட்சி நிலையத்திற்கான இடம் என' குறிப்பிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
























திருக்கேதீஸ்வரம் பகுதியில் மனித எச்சங்களை தேடும் பணி தொடர்கிறது...- படங்கள் - விசேட செய்தி Reviewed by Admin on December 21, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.