அண்மைய செய்திகள்

recent
-

இரணைமடுவில் நீரில்லை; 22,000 ஏக்கர் நெற்செய்கை பாதிப்பு

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் வழமைக்கு மாறாக குறைவடைந்துள்ளதால் அதனை நம்பியிருக்கும் 22 ஆயிரம் ஏக்கர் நெற்செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

 இரணைமடு குளத்தின் நீர்மட்டம் நவம்பர் மாதத்திலிருந்து ஜனவரி மாதத்திற்கு இடைப்பட்ட காலத்தில் 32 அடிக்கு மேலாக இருப்பது கடந்தகால வழமை. இருந்தும் தற்போது 14 அடி நீர்மட்டமே காணப்படுகின்றது. இதனால் குளத்தின் கரையிலிருந்து பெரும்பகுதி நீரின்றி வற்றிய நிலையில் வெறும் தரையாகக் காணப்படுகின்றது.


 இதனால் இரணைமடு குளத்தினை நம்பி சிறுபோக நெற்செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். வடபகுதியில் வருடத்திற்கு குறைந்தது 55 நாட்களுக்கு மேல் மழை பெய்யும் நிலையில் தற்போது மாரி மழைகூட இல்லாத நிலையில் பெரும்பாலான குளங்கள் நீரின்றி வற்றிய நிலையில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இரணைமடுவில் நீரில்லை; 22,000 ஏக்கர் நெற்செய்கை பாதிப்பு Reviewed by Admin on December 25, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.