அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்டத்தில் மூவாயிரம் ஏக்கர் சோளம் பயிர் செய்ய நடவடிக்கை. றிஸாட் பதியுதீன்.

மன்னார் மாவட்ட விவசாயிகள் மத்தியில் சோளம் செய்கையினை ஊக்குவிக்கும் வகையில்
மன்னார் மாவட்டத்தில் 3 ஆயிரம் ஏக்கர் சோளச் செய்கையினை மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் றிஸாட் பதியுதீன் தெரிவித்தார் .

மன்னார் மாவட்ட விவசாயிகள் மற்றும் மீனவர்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் அவசர கூட்டம் ஒன்று அமைச்சர் றிஸாட் பதியுதீன் தலைமையில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம் பெற்றது . அதன் போது உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார் .

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் ,,,, ,

மன்னார் மாவட்டத்திரல் உள்ள மீனவர்களும் , விவசாயிகளும் கடந்த காலங்களில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களில் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர் . மாவட்டத்தில் 26 ஆயிரம் விவசாயிகளும் , 9 ஆயிரம் மீனவர்களும் பாதிப்படைந்துள்ள்தாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .

பாதிப்படைந்த மீனவர்களுக்கும் , விவசாயிகளுக்கும் நஸ்ர ஈட்டைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கைகள் மேற்கொள் ; ளப்பட்டுள்ளது .

இதே வேளை மன்னார் மாவட்ட விவசாயிகளின் மத்தியில் சோளம் பயிர்ச் செய்கையினை ஊக்கிவிக்கும் முகமாக மன்னார் மாவட்டத்தில் 3 ஆயிரம் ஏக்கர் சோளம் செய்கை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது .

 இவ்விடயம் தொடர்பில் எதிர் வரும் வாரம் மன்னாரில் விசேட கலந்துரையாடல்களும் மேற்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார் .

மன்னார் மாவட்டத்தில் மூவாயிரம் ஏக்கர் சோளம் பயிர் செய்ய நடவடிக்கை. றிஸாட் பதியுதீன். Reviewed by Admin on December 25, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.