அண்மைய செய்திகள்

recent
-

மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு இடமாற்றம்.

மேல் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதிகள்
19 பேர் ஜனவரி முதலாம் திகதி முதல் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் தெரிவித்தார்.

இதன் பிரகாரம் கொழும்பு இல.1 மேல் நீதிமன்றத்தின் நீதிபதி குமுதினி விக்ரமசிங்க, கல்கிசைக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.

கல்கிசை சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதி ரோஹினி வல்கம, கொழும்பு இலக்கம் 1 மேல் நீதிமன்றத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளார்.

கொழும்பு சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதி டப்ளியு.ஜி.நெலுந்தெனிய, கொழும்பு இல.1 வர்த்தக மேல் நீதிமன்றத்திற்கும் இடமாற்றப்பட்டுள்ளார்.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பிரிதி பத்மன் சுனசேன, களுத்துறை மேல் நீதிமன்றத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளார்.

களுத்துறை மேல் நீதிமன்ற நீதிபதி அமல் திலகரத்ன, சிலாபம் மேல் நீதிமன்றத்திற்கு  இடமாற்றப்பட்டுள்ளார்.

சிலாபம் மேல் நீதிமன்ற நீதிபதி பத்மின ரணவக்க குணத்திலக்க,  கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு  இடமாற்றப்பட்டுள்ளார்.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீராண் குணரத்ன, இரத்தினபுரி மேல் நீதிமன்றத்திற்கு  இடமாற்றப்பட்டுள்ளார்.

இரத்தினபுரி மேல் நீதிமன்ற நீதிபதி மொஹான் செனவிரத்ன, பலப்பிட்டி மேல் நீதிமன்றத்திற்கு  இடமாற்றப்பட்டுள்ளார்.

பலப்பிட்டிய மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆர் ஹெய்யன்துடுவ,  கேகாலை சிவில் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு  இடமாற்றப்பட்டுள்ளார்.

கண்டி சிவில் மேன்முறையீட்டு நீதிபதி லியோன் செனவிரத்ன, கொழும்பு சிவில் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

கண்டி சிவில் மேன்முறையீட்டு நீதிபதி அருண ரணசிங்க, கொழும்பு இல.2 வர்த்தக மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

கண்டி இல.2 மேல் நீதிமன்ற நீதிபதி ஆமேந்திர செனவிரத்ன, கொழும்பு இல.3 வர்த்தக மேல்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

கம்பஹா சிவில் மேல் முறையீட்டு நீதிபதி ஷிரோமி பெரேரா, கேகாலை  சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றத்திற்கு  இடமாற்றப்பட்டுள்ளார்.

வடமாகாண சிவில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நீதிபதி நிசங்க பந்துல கருணரத்ன, கம்பஹா சிவில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மாற்றப்பட்டுள்ளார்.

கொழும்பு இல.1 வர்த்தக மேல்நீதிமன்றத்தில் நீதிபதி காமினி அமரசேகர, கேகாலை மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

கொழும்பு இல.2 வர்த்தக மேல்நீதிமன்றத்தில் நீதிபதி மஹிந்த சமயவர்தன, கண்டி சிவில் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

கொழும்பு இலக்க 3 மேல்நீதிமன்றத்தின் நீதிபதி ஷமத்; மொரயஸ், கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளார்.

கேகாலை மேல் நீதிமன்ற நீதிபதி மேனகா விஜயசுந்தர, கண்டி சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளார்.

பதுளை மேன்முறையீட்டு நீதிபதி உதய கரலியத்த, கண்டி இலக்கம் 2 மேல் நீதிமன்றத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளார்.
மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு இடமாற்றம். Reviewed by Admin on December 25, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.