ஐ.நா அதிகாரி வந்தடைந்தார்
இவர் தனது விஜயத்தின்போது, அனைத்துத் தரப்பினரிடமிருந்தும் நேரடியாகத் தகவல்களைப் பெற்றுக் கொள்ளவுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது, இடம்பெயர்ந்த மக்களையும், பாதிக்கப்பட்டுள்ள சமூகங்களையும் அவர் நேரடியாக சந்திக்கவுள்ளார்.
தமது பயணத்தின்போது அவர் கொழும்பு, யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு செல்லவுள்ளார். எனவும் ஐ.நாவின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இடம்பெயர்ந்த மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள், அவர்களுக்கான வாய்ப்புகள் மற்றும் காத்திரமான தீர்வுகள் குறித்து தான் கவனம் செலுத்தவுள்ளதாக பெயானி தெரிவித்துள்ளார்.
அதேநேரம் அவர்களின் பாதுகாப்பு மற்றும் மற்றும் உதவிகள் தொடர்பான முன்னேற்றங்கள் குறித்தும் அவர் அங்கு விவாதிக்கவுள்ளார்;. தமது பயணத்துக்கு பிறகு தான் கண்டவை குறித்து முதற்கட்டமாக எழுத்துபூர்வமான ஒரு அறிக்கையை அவர் வெளியிடவுள்ளார்.
அவரது பயணம் குறித்த முழுமையான அறிக்கை அடுத்த ஆண்டு ஜூன் மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் குழுவில் சமர்பிக்கப்படும்.
எதிர்வரும் ஆறாம் தேதி வரையிலான இந்தப் பயணத்தின்போது, அரச தரப்பினர், சிவில் சமூகத்தினர் மற்றும் இலங்கையிலுள்ள ஐ.நாவின் உயரதிகாரிகள் ஆகியோரையும் பெயானி சந்திப்பார் என்று அவரது பயணம் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு கூறுகிறது.
ஐ.நா அதிகாரி வந்தடைந்தார்
Reviewed by Author
on
December 03, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment