மன்னார் முசலியில் யானைகள் கொண்டு வந்து விடப்பட்டுள்ளமையினால் மக்கள் அச்சம்.
மன்னார் மாவட்டம் முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட அரிப்பை அண்டியுள்ள கோணியன் குளம் கிராம பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் யானைகள் கடந்த ஒரு வாரத்திற்கு முன் கொண்டு வந்து இறக்கி விடப்பட்டுள்ளதாக முசலி பிரதேச சபை உறுப்பினர் மார்க்கஸ் நீக்கிலாஸ் பெனான்டோ தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்
முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட அரிப்பை அண்டியுள்ள கோணியன் குளம் கிராமத்தை அண்டிய காட்டுப்பகுதியில் யானைகள் கொண்டு வந்து இறக்கி விடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அப்பகுதி மக்கள் என்னிடமும்,அதிகாரிகளிடமும் முறைப்பாடு செய்துள்ளனர்.
யார் இந்த யானைகளை கொண்டு வந்தது என்ற விடையம் தெரியவில்லை.தற்போது குறித்த கோணியன் குளம் பகுதியில் மக்களின் குடியேற்றம் இடம் பெற்றுள்ள நிலையில் புதிய வீடுகளும் அமைக்கப்பட்டு வருகின்றது.
குறித்த பகுதியில் அந்த மக்கள் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
ஆனால் தற்போது மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
எனவே இவ்விடையத்தில் உரிய அதிகாரிகள் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு மக்களை யானைகளிடம் இருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.என கோரிக்கை விடுத்துள்ளார்.
மன்னார் முசலியில் யானைகள் கொண்டு வந்து விடப்பட்டுள்ளமையினால் மக்கள் அச்சம்.
Reviewed by Author
on
December 03, 2013
Rating:
No comments:
Post a Comment