சாரதியின்றி பயணித்த ரயில்
தெமட்டகொடையில் ரயில்கள் நிறுத்திவைக்கப்படும் இடத்திலிருந்து இன்று வியாழக்கிழமை அதிகாலை 1.45 மணியளவில் ரயில் சாரதி இல்லாது, மேற்படி ரயில் இன்ஜின் தானாகவே இயங்கி பயணித்துள்ளது. இவ்வாறு பயணித்த மேற்படி ரயில் இன்ஜின் கல்கிஸைக்கும் இரத்மலானைக்கும் இடையில் நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு ரயில் இன்ஜின் பயணித்துள்ள நிலையில் விபத்துக்கள் எதுவும் சம்பவிக்கவில்லை எனவும் அவர்கள் கூறினர். இந்த ரயில் இன்ஜின் தற்போது இரத்மலானை ரயில் நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து குறித்த ரயில் இன்ஜின் சாரதியும் அவரது உதவியாளரும் உடனடியாகப் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக ரயில்வே திணைக்களத்தினால் தொழில்நுட்பக் குழுவைச் சேர்ந்த மூவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சாரதியின்றி பயணித்த ரயில்
Reviewed by Author
on
December 05, 2013
Rating:

No comments:
Post a Comment