அண்மைய செய்திகள்

recent
-

பொன்தீவுகண்டல் பகுதியில் பதற்றம்

மன்னார் நானாட்டான் பிரதேச செயலக பிரிவிலுள்ள பொன்தீவு கண்டல் கிராம அலுவலர் பிரிவில் மீள் குடியேற்றத்திற்கான காணி பகிர்ந்தளித்தலில் ஏற்பட்ட பிணக்குகளைத் தொடர்ந்து இன்று சனிக்கிழமை காலை குறித்த காணியில் இடம் பெயர்ந்த முஸ்ஸிம் மக்கள் குறித்த காணிகளில் வீடுகளை அமைக்கும் பணியில் ஈடுபட்டமையினால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்

நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பொன்தீவு கண்டல் கிராமத்தில் காணி பகிர்ந்தளிப்பு தொடர்பாக நீண்ட நாள்  இரு சமூகத்தினருக்கிடையில் முரண்பாடு ஏற்பட்டு வந்தது.

-இந்த நிலையில் நானாட்டான் பிரதேசச் செயலாளர் குறித்த காணியினை இரண்டாக பிரித்து இடம் பெயர்ந்த முஸ்ஸிம் மக்களுக்கும்இஏனைய காணியினை பொன்தீவு கிராம மக்களுக்கும் வழங்குவதாக தெரிவித்திருந்தார்.

-இந்த நிலையில் முஸ்ஸிம் மக்களுக்காக ஒதுக்கப்பட்ட காணியில் இன்று சனிக்கிழமை காலை முதல் அந்த காணியின் உரிமையாளர்கள் காணியில் வீட்டு திட்ட பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில் பொன்தீவு கண்டல் கிராம மக்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

-வீட்டு வேளைத்திட்டம் இடம் பெறும் பகுதியில் ஒன்று திரண்ட மக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இந்த நிலையில் நூற்றுக்கணக்கான பொலிஸாரும்,கழகம் அடக்கும் பொலிஸாரும் குறித்த பகுதியில் குவிக்கப்பட்டிருந்தனர்.

பின் பொலிஸார் பொன்தீவு கண்டல் கிராம மக்கள் மீது கண்ணீர் புகை;குண்டு தாக்குதல்களை மேற்கொள்ள எத்தனித்தனர்.

இந்த நிலையில் மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அன்றனி விக்டர் சோசைஇதமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன்,எஸ்.வினோ நோகராதலிங்கம், அளவக்கை பங்குத்தந்தை சுரேஸ் றெவல்இமன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை இம்மானுவேல் செபமாலை ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று பொன்தீவு கண்டல் கிராம மக்களுடன் கலந்துரையாடினர்.

இந்த நிலையில் தற்போது முஸ்ஸிம் மக்களுக்கு நானாட்டான் பிரதேச செயலகத்தினால் ஒதுக்கப்பட்ட பொன்தீவு கண்டல் பகுதியில் உள்ள காணியில் முஸ்ஸிம் மக்கள் பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் வீடுகளை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் அசம்பாவிதங்கள் எதுவும் இடம் பெறாத வகையில் அப்பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.






பொன்தீவுகண்டல் பகுதியில் பதற்றம் Reviewed by Author on December 07, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.