இந்திய பிரதமரின் வருகையை மறுக்கும் இலங்கை
'இலங்கைத் தமிழர்களின் வாழ்வாதாரத்துக்கான உரிமையும் இந்தியாவின் நிலைப்பாடும்' எனும் கருப்பொருளில் நடைபெறவுள்ள மாநாட்டுக்கு சிங் வருவார் என கூறினாலும் அவர் வருகைக்கான தினம் பற்றி சிதம்பரம் எதையும் குறிப்பிடவில்லை.
கொழும்பில் நடந்த பொதுநலவாய தலைவர்கள் மாநாட்டுக்கு பிரதமர் செல்லக் கூடாதென நிதியமைச்சர் சிதம்பரம் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் எ.கே.அன்ரனி ஆகியோரே அழுத்தம் கொடுத்தவர்கள் எனற கருத்தை கொழும்பு கொண்டுள்ளதென தகவலறிந்த வட்டாரங்கள் கூறின.
பிரதமர் மன்மோகன் சிங் தனது யாழ்ப்பாண விஜயத்தின்போது வடமாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை சந்திப்பார் என சென்னை மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போது சிதம்பரம் கூறினார்.
இலங்கை மீதான இந்தியாவின் அழுத்த வலு குறைந்துவிட்டது என இலங்கை அதிகாரிகள் கூறினர். இப்போது இந்திய செல்வதை நாம் கேட்க வேண்டியதில்லைஇ உதாரணமாக காங்கிரஸ் தலைவர்கள் எமக்கு கூறியபடி நாம் வடமாகாண சபை தேர்தலை நடத்தினோம். இனிமேல் இந்த அரசாங்கத்திடம் நாம் பேசமாட்டோம் என இலங்கை அதிகாரி ஒருவர் கூறினார்.
இந்திய பிரதமரின் வருகையை மறுக்கும் இலங்கை
Reviewed by Author
on
December 06, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment