அண்மைய செய்திகள்

recent
-

எமது இணையத்தளத்தின் (Newmannar) பெயரில் போலி இணையங்கள் ,இது தொடர்பாக எமது விளக்கம் ....


எமது மன்னார் இணையத்தளமானது (Newmannar)  கடந்த 4  வருடங்களாக  மன்னார் செய்திகள் தகவல்களை உலகெங்கும் வாழும் மன்னார் மாவட்ட  மக்களுக்கு வழங்கி வருகின்றது.  இப் பணியினை  நாங்கள்  பல சிரமத்தின் மத்தியிலும்   இடைஞ்சல்கள் மத்தியிலும் வழங்கி வருகின்றோம்.

இச் சந்தர்ப்பத்தில் எமக்கு ஆதரவினை வழங்கி வரும்   மத தலைவர்கள்,அரசியல் தலைவர்கள் ,  அரச மற்றும் தனியார்  நிறுவன ஊழியர்கள் மற்றும் பொது மக்கள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவிக்கின்றோம்.

 எமது இணையத்தின் Newmannar நன்மதிப்பை வைத்து எமது  மன்னார் இணையத்தளத்தின்(Newmannar) பெயரில் போலி இணையத்தளங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.


எமது இணையத்தளமான Newmannar எனும் பெயரில் போலி இணையத்தளங்களை உருவாக்கி மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த சிலர் முயற்சி மேற்கொள்ளுகின்றனர் இதுவரை 2 இணையத்தளங்கள் Newmannar எனும் அடையாளத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. 

  மேலும் இவர்கள்  மன்னார்  இணையத்தளத்தினை (Newmannar) பயன்படுத்தி விளம்பரங்களை பெற முயற்சிக்கலாம் என்பதை  முன்கூட்டியே  அறியத்தருகின்றோம்.

சம்மந்தப்பட்டவர்கள் எமது பெயரை பயன்படுத்தாமல் வேறு பெயர்களை பயன்படுத்தி மன்னார் செய்திகள் தகவல்களை  வெளியிடுவதை நாங்கள் ஒருகாலமும் எதிர்க்கப் போவதில்லை. ஆனால் அவர்கள் எங்கள்  இணையத்தின்(Newmannar) பெயரை பிரதானமாக வைத்து செயற்படுவதை வன்மையாக கண்டிக்கின்றோம்.  தனிப்பட்ட ஒருவரை பற்றி விமர்சிக்க மன்னார் இணையம்(Newmannar) விரும்பவில்லை தேவை ஏற்படின் ஆதாரத்துடன் தகவல்களை வெளியிட தயங்க மாட்டோம் என்பதனையும் தெரிவிக்கின்றோம்.



இவர்கள்  எமது இணையத்தளத்திற்கு(Newmannar) தடங்கல்களை  ஏற்படுத்த முற்பட்டால் இவர்கள் தொடர்பான பல விடயங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வருவோம்.

மன்னார் இணையமானது (Newmannar) தொடர்ந்து மன்னார் மாவட்ட செய்திகள் தகவல்களை அரசியலுக்கு அப்பால் நடுநிலையுடன் செவ்வனே செய்து வரும் என்பதனை தெரிவித்துக்கொள்கின்றோம்.

தொடர்ந்து உங்களது செய்திகளை newmannar@gmail .com  எனும் மின் அஞ்சல் முகவரிக்கே அனுப்பி வைக்குமாறு  கேட்டுக்கொள்கின்றோம்.


எமது பிரதான இணையத்தளம்.


எமது ஏனைய இணையத்தளங்கள். 

http://tv.newmannar.com

                             

                                                        நன்றி!

மன்னார் இணையம்
(Newmannar.com)


எமது இணையத்தளத்தின் (Newmannar) பெயரில் போலி இணையங்கள் ,இது தொடர்பாக எமது விளக்கம் .... Reviewed by NEWMANNAR on January 18, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.