அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மனித புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட எச்சங்களை பாதுகாப்பான இடத்தில் வைக்குமாறு நீதவான் உத்தரவு.

மன்னார் திருக்கேதிஸ்வரம் பகுதியில் அடையாளம் காணப்பட்ட மனித புதைகுழியிலிருந்து இதுவரையில்
மீட்கப்பட்டுள்ள மண்டை ஓடுகள் , எலும்புக்கூடுகள் மற்றும் மனித எச்சங்களை பாதுகாப்பான இடத்தில் களஞ்சியப்படுத்தி வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது .

மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை மேற்பார்வை செய்யும் மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்னம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார் .

மனித புதைகுழியிலிருந்து இதுவரை 43 மண்டை ஓடுகளும் 10 மனித எலும்புக் கூடுகளும் மீட்கப்பட்டுள்ளன

இதேவேளை , மனித புதைகுழி தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு கொழும்பிலிருந்து மன்னாருக்கு சென்ற 06 பேர் கொண்ட குற்றப் புலனாயவு அதிகாரிகள் குழு நேற்று தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான அஜித் ரோஹன குறிப்பிட்டார் .
மன்னார் மனித புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட எச்சங்களை பாதுகாப்பான இடத்தில் வைக்குமாறு நீதவான் உத்தரவு. Reviewed by NEWMANNAR on January 25, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.