உணவு வகைகளில் 19 வகையான சுவையூட்டிகளை சேர்ப்பதற்கு தடை
உணவு வகைகளில் 19 வகையான சுவையூட்டிகளை சேர்ப்பதற்கு சுகாதார அமைச்சு தடை விதித்துள்ளது.
குறித்த சுவையூட்டிகளுக்கு இவ் வருடம் ஜுலை மாதம் முதலாம் திகதியிலிருந்து தடை அமுலாகுமென சுகாதார அமைச்சின் அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, உணவு ஆலோசனைக் குழுவுடன் கலந்தாலோசித்ததன் பின்னரே குறித்த தடையை விதித்துள்ளார்.
இதன்படி எலொய்ன், பேர்பெரின், பெட்டா எசரோன், கேட் ஒயில், கலமஸ் ஒயில் உள்ளிட்ட 19 சுவையூட்டிகளுக்கு குறித்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சில சுவையூட்டிகளை பயன்படுத்துவதற்கு, சுகாதார அமைச்சிடம் முன்கூட்டிய அனுமதி கோர வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க
உணவு வகைகளில் 19 வகையான சுவையூட்டிகளை சேர்ப்பதற்கு தடை
Reviewed by NEWMANNAR
on
January 25, 2014
Rating:

No comments:
Post a Comment