அண்மைய செய்திகள்

recent
-

அடுத்த மாதம் முதல் மும்மொழிகளில் தேசிய அடையாள அட்டை

அடுத்த மாதம் முதல் மும்மொழிகளையும் உள்ளடக்கியதாக தேசிய அடையாள அட்டையை விநியோகிப்பதற்கு ஆட்பதிவுத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அச்சிடப்பட்டு வெளியிடப்படும் தேசிய அடையாள அட்டை மும்மொழிகளை உள்ளடக்கியதாக விநியோகிக்கப்படும் என திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.எஸ் சரத்குமார ​தெரிவித்தார்.

கணணிமயப்படுத்தப்பட்ட புதிய முறைக்கமைய, இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் 2016 ஆம் ஆண்டளவில் தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய அடையாள அட்டையை விநியோகிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவிக்கின்றது.

இதற்கான முதற்கட்ட பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.எஸ் சரத்குமார மேலும் குறிப்பிட்டார்.
அடுத்த மாதம் முதல் மும்மொழிகளில் தேசிய அடையாள அட்டை Reviewed by Admin on January 14, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.