அண்மைய செய்திகள்

  
-

வடக்கு புகையிரதப் பாதைதண்டவாளங்களை திருடியவர்கள் கைது

வடக்கு புகையிரதப் பாதையினை அமைப்பதற்கென எடுத்து வரப்பட்டு மதவாச்சி பகுதியில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்ட பதினெட்டு இலட்சம் ரூபா பெறுமதியான தண்டவாளங்கள் பத்தினை திருடிச்சென்ற நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மதவாச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

களஞ்சியசாலையில் வைக்கப்பட்டிருந்த 150 அடி நீளமான பத்து ரயில் தண்டவாளங்கள் திருடப்பட்டுள்ளதாக மதவாச்சி பொலிஸ் நிலையத்தில் ரயில்வே திணைக்கள அதிகாரிகள் புகார் செய்ததை அடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் களஞ்சியசாலையின் பாதுகாப்பு ஊழியர் மற்றும் இப்பகுதி சிவில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் உட்பட நான்கு பேரைக் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு திருடப்பட்ட தண்டவாளங்களை சிறிய துண்டுகளாக வெட்டி லொறி ஒன்றில் ஏற்றிச்சென்று நொச்சியாகம பகுதி பழைய இரும்புகடை வியாபாரி ஒருவருக்கு விற்பனை செய்ததாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது. இது தொடர்பான விசாரணைகளை மதவாச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வடக்கு புகையிரதப் பாதைதண்டவாளங்களை திருடியவர்கள் கைது Reviewed by Admin on January 14, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.