மன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவருக்கும் தொடர்ந்து விளக்கமறியல்
இலங்கை இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு இரு நாட்டு கடற்படையினராலும் கைது செய்யப்பட்ட மீனவர்கள் விளக்கமறியலில் இருந்த நிலையில் இருநாட்டு மீனவர்களும் விடுவிக்கப்பட்ட போதும் மன்னார் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் இன்னும் விடுவிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என திங்கற்கிழமை (13.01.2014) இந்திய இலங்கை உயர்ஸ்தானியத்தின் யாழ்ப்பாண துணை அதிகாரிகள் மன்னார் நீதிமன்றத்திற்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பினர்.
இந்திய இலங்கை கடல் எல்லையில் இரு நாட்டு மீனவர்களும் எதில்நோக்கும் பிரச்சினை சம்மந்தமாக கடற்தொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் ராஐpத சேனாரத்தினவின் ஏற்பாட்டில் வடபகுதி மினவ பிரதிநிதிகள் பேச்சுவர்த்தை நடாத்துவதற்காக புதுடில்லி மற்றும் தமிழ்நாட்டிற்கு செல்லும் இவ் வேளையில் இலங்கை இந்தியா கடல் எல்லைக்குள் வைத்து கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இரு நாட்டு மீனவர்களில் தலா 52 பேர் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதே வேளையில் கடந்த 3.01.2014 மன்னார் தாழ்பாட்டு கடற்பரப்பிற்குள் கைதுசெய்யப்பட்டதாக கூறப்படும் இந்திய இழுவைப்படகு 2 படகுகளுடன் 10 இந்திய மீனவர்களும் கைதுசெய்யப்பட்டு மன்னார் நீதிமன்றத்தில் ஆஜராக்கப்பட்ட நிலையில் அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களும் விடுவிக்கப்படுவார்கள் என இந்திய இலங்கை உயர்ஸ்தானியத்தின் யாழ்ப்பாண துணை அலுவலக உதவி தூதரக ஸ்தானிகர் சுப்ரமணியம் தச்சனாமூர்த்தி கடந்த திங்கற்கிழமை (13.01.2014) மன்னார் நீதிமன்றத்திற்கு வந்தபோதும் இவர்களை விடுவிப்பதறாகான உத்தரவு கிடைக்காததால் இவ் மீனவர்கள் விடுவிக்கப்படாத நிலையில் இவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
மன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவருக்கும் தொடர்ந்து விளக்கமறியல்
Reviewed by Author
on
January 14, 2014
Rating:
.jpg)
No comments:
Post a Comment