33 வது ஆண்டு நிறைவை கொண்டாடும் மன்னார் மறைமாவட்டம் - படங்கள்
மன்னார் மறைமாவட்டம் உதயமாகி 33 வருடம் பூர்த்தியானதை முன்னிட்டு மன்னார் தோட்டவெளி புனித வேதசாட்சிகள் ஆலயத்தில் நேற்று சனிக்கிழமை (25.01.2014) கொண்டாடப்பட்டபோது
மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இராயப்பு யோசேப்பு ஆண்டகை தலைமையில் குருமுதல்வர் விக்டர் சோசை, அருட்பணி.சேவியர் குரூஸ், அருட்பணி எமிலியான்ஸ்பிள்ளை, அருட்பணி சகாயநாதன், அருட்பணி.பெனோ ஆகியோர் சேர்ந்து கூட்டுத்திருப்பலி ஒப்புக்கொடுத்தனர்
இவ் ஆராதனைகளின் போது ஆயர் திருச்சுருப ஆசீரவாதம்; வழங்கிவைத்தார்.
இதேவேளை தோட்டவெளி ஆலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டிருக்கும் நற்கருணை தியான சிற்றாலயம் ஒன்றை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை ஆசீர்வதித்து திறந்துவைத்தார்
குறித்த நிகழ்வுகளின் போது மன்னார் மாவட்டத்தை சேர்த அனைத்து குருக்களும், அருட்சகோதரிகளும், அருட்சகோதரர்களும் இத்திருப்பலியில் பங்குபற்றினர். அத்தோடு பெரும் எண்ணிக்கையிலான இறைபக்தர்களும் கலந்து கொண்டு இறை ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டனர்.
33 வது ஆண்டு நிறைவை கொண்டாடும் மன்னார் மறைமாவட்டம் - படங்கள்
Reviewed by Author
on
January 26, 2014
Rating:

No comments:
Post a Comment