எனக்கு புனர்வாழ்வளிப்பது விந்தையானது: அனந்தி
நான் போராளியல்ல, என்னை புனர்வாழ்வுக்கு உட்படுத்துவது விந்தையானது. கிளிநொச்சி மாவட்டத்தில் நான் அரச உத்தியோகஸ்தராக பணியாற்றியமை யாருக்கும் தெரியாது என்று வடக்கு மாகாணசபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.
சிங்களவர்களுக்கும் எனக்கும் இடையில் எவ்விதமான கருத்து முரண்பாடுகளும் இல்லை. மக்களின் பிரதிநியான நான் முதலமைச்சரின் அனுமதியுடனேயே வெளிநாட்டு பிரதிநிகளை சந்திக்கின்றேன் என்றும் அவர் கூறினார்.
காணாமல் போனவர்களின் தகவல்களை திரட்டி வழங்கியுள்ளேன்.இதற்காக எனக்கு புனர்வாழ்வளித்தால் அது விந்தையானதாகவே இருக்கும் என்றார்.
அனந்தி சசிதரனை புனர்வாழ்வுக்கு உட்படுத்துவது குறித்து பாதுகாப்பு அமைச்சு தீவிரமாக ஆராய்ந்து வருவதாக வெளியான செய்தி தொடர்பில் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பிரிவினைவாத உணர்வுகளைத் தூண்டும் வகையில் அவர் பரப்புரை செய்து வருவதாகவும், அதனைத் தடுப்பதற்காகவே அவருக்கு புனர்வாழ்வு அளிப்பது குறித்து ஆராயப்படுவதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
அந்த செய்தி தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்திருப்பதாவது,
'2009 மே மாதம் போரின் முடிவில் கைது செய்யப்படாதவர்கள் அல்லது சரணடையாதவர்கள் இலங்கை அரசாங்கத்தின் புனர்வாழ்வு திட்டத்தை தவறவிட்டுள்ளனர்.
புனர்வாழ்வுத் திட்டத்தில் இருந்து தப்பியவர்களில் அனந்தியும் அடங்குகிறார். அவரை புனர்வாழ்வுக்கு அனுப்புவது தொடர்பான முடிவு விரைவில் எடுக்கப்படும்.
ஒருவேளை அனந்தி புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டிருந்தால், அவர் சிறிலங்கா அரசாங்கத்துக்கும், இராணுவத்துக்கும் எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருந்திருக்கமாட்டார்.
அனந்தியை புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைப்பதால், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டம் நடக்கவுள்ள நிலையில், அனைத்துலக சமூகத்திடம் இருந்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் இருந்தும் கடும் எதிர்ப்புகளை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.
ஆனால், அனந்தியை புனர்வாழ்வுக்கு உட்படுத்தாவிட்டால், போருக்குப் பிந்திய நல்லிணக்க முயற்சிகளை சீரழிக்கும் அவரது நடவடிக்கைகள் தொடரும் என்று இலங்கை அரசாங்கம் கருதுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
வடக்கு மாகாணசபையின் உறுப்பினராக அண்மையில் தெரிவு செய்யப்பட்ட அனந்தி சசிதரன், விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல் பொறுப்பாளரான எழிலனின் மனைவியாவார்.
இவர், வடக்கு மாகாணசபை உறுப்பினராப் பதவியேற்ற பின்னர், கனடா, அமெரிக்கா, ஜேர்மனி, டென்மார்க், நோர்வே போன்ற நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார்.
அண்மையில், சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் போர்க்குற்ற விவகாரங்களை கவனிக்கும் சிறப்பு தூதுவர் ஸ்டீபன் ராப், அனந்தி சசிதரனை சந்தித்து காணாமற்போனவர்களின் நிலை மற்றும் இறுதிப்போர் குறித்த விபரங்களை கேட்டறிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Reviewed by Author
on
January 16, 2014
Rating:
.jpg)
No comments:
Post a Comment