இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை கொடுக்காமல் இருப்பது நியாமல்ல

கோவையில் வாழும் கலை அமைப்பின் சார்பில், மூன்று நாள் நடக்கும் சத்சங்கம் நிகழ்ச்சி கடந்த(29) துவங்கியது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அந்த அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கோவை சென்றார். இரண்டாவது நாளான நேற்று (30) மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார்.
அதன்பின் நிருபர்களை சந்தித்தபோது,
இலங்கை தமிழர்களுக்கு இந்தியாவில் குடியிரிமை வழங்க வேண்டும் என வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடத்தி வருகிறோம். இதுவரை 10 லட்சம் பேரிடம் கையெழுத்து பெற்றுள்ளோம். ஒரு கோடி பேரிடம் கையெழுத்து பெற்று பிரதமரிடம் வழங்க திட்டமிட்டு இருக்கிறோம்.
20 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவில் வசித்து வரும் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை கொடுக்காமல் இருப்பது நியாமல்ல. பல நாடுகளில் இருந்து வந்தவர்களுக்கு குடியுரிமை வழங்கி இருக்கும் நிலையில், இலங்கையில் இருந்து வந்தவர்களுக்கு ஏன் குடியுரிமை கொடுக்க கூடாது?
இவ்வாறு அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை கொடுக்காமல் இருப்பது நியாமல்ல
Reviewed by Author
on
January 31, 2014
Rating:

No comments:
Post a Comment