அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதை குழியிலிருந்து அதிகரித்து வரும் மனித எலும்பு கூடுகள் -படங்கள்

மன்னார் - திருக்கேதிஸ்வரம் பகுதியில் இதுவரை 11 இற்கும் மேற்பட்ட மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் மன்னார் நீதவானின் உத்தரவிற்கமைவாக மீண்டும் இன்று (03) வெள்ளிக்கிழமை காலை முதல் குறித்த பகுதியில் உள்ள மனித புதைகுழி தோண்டப்பட்டது. 

மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் குறித்த மனித எச்சங்களை தேடும் பணி நடைபெற்றது. அனுராதபுர சட்ட வைத்திய நிபுணர் டி.எல்.வைத்திய ரெட்ண உட்பட வைத்திய பகுப்பாய்வாளர்கள் பலர் குறித்த மனித புதைகுழியில் மனித எச்சங்களை தேடும் பணியில் ,ஈடுபட்டனர் .
இன்று காலை 8 மணிமுதல் பிற்பகல் 2.15 மணிவரை குறித்த மனித புதைகுழி தோண்டப்பட்டு மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டது. 

ஏற்கனவே 11 மனித எழும்புக்கூடுகள் முழுமையாகவும்இ சில மனித எலும்புக்கூடுகள் துண்டு துண்டுகளாகவும் மீட்கப்பட்டிருந்தது. 

இந்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமை காலை முதல் மாலை வரை மேலும் 4 மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. 

இதே வேளை சில தடையப்பொருட்களும் குறித்த புதைகுழியில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. தற்போது மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளை அடையாளப்படுத்தி வருகின்றனர். 

மேலும் பல மனித எலும்புக்கூடுகள் இருக்கலாம் என தெரிய வந்துள்ள நிலையில் அப்பகுதியில் விரிவுபடுத்தி மனித புதை குழிகள் தோண்டப்படவுள்ளது. 



குறித்த மனித புதை குழி தோண்டும் பணி நாளை சனிக்கிழமை காலை மீண்டும் மன்னார் நீதவான் முன்னிலையில் இடம் பெறவுள்ளது. 

இந்த நிலையில் தற்போது மீட்கப்பட்டுள்ள மனித எலும்புக்கூடுகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். 











































மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதை குழியிலிருந்து அதிகரித்து வரும் மனித எலும்பு கூடுகள் -படங்கள் Reviewed by Author on January 03, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.