முல்லைத்தீவுக்கு கனேடிய எம்.பி. ராதிகா விஜயம்
கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான விஜயத்தை நேற்று வியாழக்கிழமை மேற்கொண்டுள்ளார்.
2009ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தம் இடம்பெற்ற புதுக்குடியிருப்பு, முள்ளிவாய்க்கால் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டுள்ளதுடன், அங்கு மீள்குடியேறியுள்ள மக்களையும் அவர் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது, தாங்கள் எதிர்நோக்கிவரும் பிரச்சினைகள் தொடர்பிலும் காணாமல் போயுள்ளவர்கள் தொடர்பிலும் கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசனிடம் அங்குள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்குச் சென்று கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் வழிபாடுகளை மேற்கொண்டுள்ளார்.
இலங்கைக்கான விஜயத்தை டிசெம்பர் மாதம் 28 ஆம் திகதி மேற்கொண்டுள்ள கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் யாழ்ப்பாணம், மன்னார் ஆகிய மாவட்டங்களுக்கும் விஜயம் செய்திருந்தார்.
முல்லைத்தீவுக்கு கனேடிய எம்.பி. ராதிகா விஜயம்
Reviewed by Admin
on
January 03, 2014
Rating:
.jpg)
No comments:
Post a Comment