அண்மைய செய்திகள்

recent
-

காணி சுவீகரிப்பிற்கு எதிரான போராட்டம் -படங்கள்

மன்னார் பேசாலை 'வெற்றி மா' குடியிருப்பில் அமைந்துள்ள கடற்படையினரின் முகாமை இன்று வியாழக்கிழமை(30-01-2014) நில அளவை செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட  போது குறித்த நில அளவை வேளைத்திட்டத்தினை அக்கிராம மக்கள் தடுத்து நிறுத்த முற்பட்ட போது அக்கிராம மக்களுக்கும் கடற்படையினருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டது.

மன்னார் பேசாலை புனித வெற்றி மாதா ஆலயத்திற்கு செந்தமான புனித 'வெற்றி மா' குடியேற்றத்தில் உள்ள சுமார் 1 ஏக்கர் நிலப்பரப்பினைக்கொண்ட காணியில் கடற்படையினர் கடற்படை முகாமை அமைத்து உள்ளனர்.

இந்த நிலையில் குறித்த காணியை நில அளவை செய்து கொள்ள கடற்படையினர் பல தடவை முயற்சி செய்த போதும் பேசாலை கிராம மக்கள் தொடர்ந்தும் எதிர்ப்புத்தெரிவித்து வந்தனர்.

இந் நிலையில் இன்று வியாழக்கிழமை(30-01-2014) காலை நில அளவை திணைக்களத்தில் ஊளியர்கள் குறித்த கடற்படையினரின் முகாமை நில அளவை செய்ய வருகை தந்த போது பேசாலை மக்கள் அவர்களை வழி மறித்து நில அளவை செய்ய அனுமதி வழங்கவில்லை.

இந்த நிலையில் வடமாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி பிரிமூஸ் சிறாய்வா ,மன்னார் பிரதேச சபை உறுப்பினர் கொன்சால் குலாஸ்,பேசாலை உதவி பங்குத்தந்தை அருட்தந்தை அருட் குமரன்  ஆகியோரும் சம்பவ இடத்திற்கு வருகை தந்தனர்.

இதன்போது குறித்த இடத்திற்கு தலைமன்னார் மற்றும் சனிவிலேச் கடற்படை முகாம்களின் கடற்படை அதிகாரிகளும், பல கடற்படை சிப்பாய்களும் வருகை தந்தனர்.

இந்த நிலையில் குறித்த காணியை நில அளவை செய்ய அனுமதிக்குமாறு கடற்படை அதிகாரிகள் மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி பிரீமூஸ் சிராய்வா மற்றும் உதவி பங்குந்தந்தை ஆகியோரிடம் கோரிக்கை விடுத்தனர்.

எனினும் இந்த கோரிக்கைக்கு அவர்கள் நிராகரித்தனர்.

இந்த நிலையில் அவ்விடத்திற்கு வந்த கடற்படை அதிகாரி ஒருவர் அங்குள்ளவர்கலோடு கடும்மையான முறையில் நடந்து கொண்டார்.

அவ்விடத்தில் செய்தி சேகரிக்கச்சென்ற ஊடகவியலாளர்களையும் கடுமையாக எச்சரித்தார்.

அத்தோடு கடற்படை சிப்பாயி ஒருவர் அவ்விடத்தில் நின்ற மக்களையும் வீடியோ படம்  எடுத்தும் மக்களை அச்சுறுத்தியிருந்தார்.

எனினும் மக்கள் அவ்விடத்தை விட்டுச் செல்லாமல் நீண்ட நேரம்   அவ்விடத்தில் கூடி நின்றனர்.

இதனால் தற்போது குறித்த கடற்படையினரின் முகாம் அமைந்துள்ள காணி நில அளவை செய்யும் நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வடமாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி பிரிமூஸ் சிராய்வா அவர்களிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது அவர் தெரிவிக்கையில்,,,
குறித்த காணியினை அரசாங்கம் சுவீகரிக்கும் நோக்குடன் நில அளவை செய்ய முற்பட்டனர்.அதற்கு பேசாலை மக்களும் நாங்களும் எதிர்ப்பு தெரிவித்தோம்.நீண்ட நேரத்தின் பின் குறித்த நில அளவை செய்யும் நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது.என தெரிவித்தார்.























காணி சுவீகரிப்பிற்கு எதிரான போராட்டம் -படங்கள் Reviewed by Author on January 30, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.