இராணுவத்தின் பயன்பாட்டில் இருந்த 24 காணிகள் மீளவும் கையளிப்பு
கிளிநொச்சியில் கடந்த நான்கு வருடங்களாக இராணுவத்தினரின் பயன்பாட்டில் இருந்த 24 காணிகள் நேற்று (03) உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டது.
நேற்று பிற்பகல் கிளிநொச்சியில் அமைந்துள்ள பொழுது போக்கு மத்திய நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கிளிநொச்சி படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் உதயபெரேரா, கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன், வடக்கு மாகாண சபை உறுப்பினர் வை.தவநாதன், கரைச்சி பிரதேச செயலர் கோ.நாகேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டு காணி உரிமையாளர்களிடம் ஆவணங்களை கையளித்தனர்.
கடந்த காலங்களில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் அவர்களது முகாம்களாக இருந்து பின்னர் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த 24 காணிகளே இன்று உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இதில் கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவில் 22 காணிகளும், பூநகரியில் ஒரு காணியும், புதுகுடியிருப்பு பிரதேச செயலக விசுவமடு பிரதேசத்தில் ஒரு காணியும் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இராணுவத்தின் பயன்பாட்டில் இருந்த 24 காணிகள் மீளவும் கையளிப்பு
Reviewed by Author
on
January 04, 2014
Rating:

No comments:
Post a Comment