அண்மைய செய்திகள்

recent
-

வட மாகாண சபை இலச்சினையை பயன்படுத்தி நிதி மோசடி : சீ.வீ.கே. சிவஞானம்

வடக்கு மாகாண சபையின் இலச்சினையை பயன்படுத்தி நிதி சேகரிக்கும் நடவடிக்கையில் கனடா நாட்டின் நிறுவனமொன்று ஈடுபட்டுவருவதாக வடக்கு மாகாணசபை அவைத்தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் குற்றம்சாட்டியுள்ளார்.

 இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது,
வடக்கு மாகாண சபை அனுசரணை வழங்குவதாக குறிப்பிட்டு இவ் இணையத்தளம் சில காலமாக பணத்தினை சேகரித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த நடவடிக்கை தொடர்பாக  வட மாகாண சபை எவ்வித ஒப்புதலோ அங்கீகாரமோ அளிக்கவில்லை என்பதையும் வட மாகாண சபையின் இலச்சினையை வேறு எவரும் உபயோகிப்பது முறையற்றது.

அத்துடன் இதனால் வட மாகாண சபை நிதி சேகரிப்பில் ஈடுபடுவது என்ற தோற்றத்தை ஏற்படுத்தும் நடவடிக்கை என்றும் இது சட்டத்திற்கு முரணானது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் சம்பந்தப்பட்ட நிறுவனம் இந்த விடயத்தை கவனத்தில் எடுத்து வட மாகாண சபையின் பேரையும், இலச்சினையை ஊடங்கங்களிலும், இணையதள விளம்பரங்களிலிருந்தும் நீக்கி விடுமாறு அவர் மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.
வட மாகாண சபை இலச்சினையை பயன்படுத்தி நிதி மோசடி : சீ.வீ.கே. சிவஞானம் Reviewed by NEWMANNAR on February 17, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.