முல்லைத்தீவில் 807 ஏக்கர் விவசாய நிலங்கள் துப்பரவு
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்குப் பிரதேசத்திலுள்ள 1,000 ஏக்கர் விவசாய நிலங்களில் 807 ஏக்கர் விவசாய நிலங்கள் துப்பரவாக்கி முடிக்கப்பட்டதுடன், எஞ்சிய விவசாய நிலங்கள் எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் துப்பரவாக்கப்படுமென சேவா லங்கா நிறுவனத்தின் முல்லைத்தீவு மாவட்ட நிகழ்சித்திட்ட உதவியாளர் எஸ்.சஞ்சீவகுமார் தெரிவித்தார்.
சிறாட்டிக்குளம், மூப்பன் பகுதியில் கைவிடப்பட்ட 100 ஏக்கர் வயல் நிலங்களை துப்பரவு செய்வதாக பொறுப்பேற்ற சேவாலங்கா நிறுவனம் அதில் 20 ஏக்கர் நிலங்களை துப்பரவு செய்யவில்லையென அப்பகுதி விவசாயிகள் தெரிவித்திருந்தனர்.
இது தொடர்பில் எஸ்.சஞ்சீவகுமாரிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
1,000 ஏக்கர் விவசாய நிலங்களிலுள்ள பற்றைகளை வெட்டியும் பாரியளவான குப்பைகளை அகற்றியும் கொடுப்பதாகக் கூறி 2012ஆம் ஆண்டிலிருந்து இத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இந்த நிலையில், 807 ஏக்கர் விவசாய நிலங்கள் கடந்த வருடம் ஒக்டோபர் மாதத்தில் துப்பரவாக்கி முடிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
எஞ்சிய விவசாய நிலங்கள் துப்பரவாக்கப்படவுள்ளன. இதன்போது, மேற்படி சிறாட்டிக்குளம், மூப்பன் பகுதியிலுள்ள 20 ஏக்கர் விவசாய நிலங்களும் துப்பரவு செய்யப்படுமெனவும் அவர் கூறினார்.
முல்லைத்தீவில் 807 ஏக்கர் விவசாய நிலங்கள் துப்பரவு
Reviewed by NEWMANNAR
on
February 17, 2014
Rating:
.jpg)
No comments:
Post a Comment