சுதந்திர தின நிகழ்வுக்கான அனைத்து நடவடிக்கைளும் பூர்த்தி
சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் இறுதி ஒத்திகை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவிக்கின்றது.
கேகாலை நகரை கேந்திரமாக கொண்டு இந்த ஒத்திகை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அமைச்சின் செயலாளர் பி.பீ.அபேகோன் தெரிவிக்கின்றார்.
முப்படையினரும் இணைந்து இன்று ஒத்திகை நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளைய தினம் கேகாலை நகரை மையமாக கொண்டு சர்வ மத அனுஷ்டானங்களும் இடம்பெறவுள்ளதாக அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.
சுதந்திர தின கொண்டாட நிகழ்வுகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் பி.பீ.அபேகோன் தெரிவிக்கின்றார்.
சுதந்திர தின நிகழ்வுக்கான அனைத்து நடவடிக்கைளும் பூர்த்தி
 
        Reviewed by NEWMANNAR
        on 
        
February 03, 2014
 
        Rating: 
      
 
        Reviewed by NEWMANNAR
        on 
        
February 03, 2014
 
        Rating: 


No comments:
Post a Comment