யாழில் இயங்கத் தொடங்கிய முதலாவது வீதிச் சமிக்ஜை விளக்குகள்
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியையும் ஆஸ்பத்திரி வீதியினையும் இணைக்கும் சத்திரச்சந்திப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த முதலாவது வீதிச் சமிக்ஞை விளக்குகள் நேற்று மாலையிலிருந்து இயங்க ஆரம்பித்துள்ளன.
போக்குவரத்து அதிகமாக காணப்படும் சந்திகளில் வீதி விபத்துக்கள் ஏற்படுவதை குறைத்து வீதி ஒழுங்கை பேணும் நடவடிக்கைகளுக்காக கடந்த வருடம் (2013) செப்ரெம்பர் மாதம் இந்த சமிக்ஞை விளக்குகள் பொருத்தப்பட்ட போதும். நேற்றைய தினமே (ஞாயிற்றுக் கிழமை) மாலை அவை இயங்க ஆரம்பித்தன.
யாழ்.நகரத்திற்குள் இருந்து ஏ – 9 வீதிக்கு செல்லும் வாகனங்களும், வெளியிடங்களிலிருந்து யாழ்.நகரத்திற்கு நுழையும் வாகனங்களும் சத்திரச் சந்தியினூடகவே பயணிப்பது வழக்கம் இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. மற்றும் விபத்துக்களை குறைப்பதற்காக இந்த வீதிச் சமிக்ஞைகள் இன்றும் பொருத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இந்தச் சந்தியில் சமிக்ஞை விளக்குகள் பொருத்தப்பட்ட பின்பு நவம்பர் மாதம் நீண்டகாலமாக சந்தியின் நடுவில் அமைக்கப்பட்டிருந்த திருவள்ளுவர் சிலை அங்கிருந்து அகற்றப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
யாழில் இயங்கத் தொடங்கிய முதலாவது வீதிச் சமிக்ஜை விளக்குகள்
Reviewed by NEWMANNAR
on
February 04, 2014
Rating:

No comments:
Post a Comment