யாழ். ஆயரின் கருத்துக்கு இலங்கை கத்தோலிக்க திருச்சபை பொறுப்பேற்க வேண்டும்
இலங்கை தொடர்பில் சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என யாழ். ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் தெரிவித்துள்ள கருத்துக்கு இலங்கை கத்தோலிக்க திருச்சபை பொறுப்பேற்க வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அந்த கட்சியின் மத்திய குழு உறுப்பினரான பஸ்ஸரமுல்லே தயாவங்ஸ தேரர் இதனை குறிப்பிட்டார்.
தோமஸ் சௌந்தரநாயகத்தின் இந்த கருத்தானது சர்வதேசத்தில் எஞ்சியுள்ள புலம்பெயர் விடுதலைப்புலிகளுக்கு உதவுவதாக அமைந்துள்ளது எனவும் அவர் கூறினார்.
இலங்கைக்கு அண்மையில் விஜயம் செய்த அமெரிக்க உதவி ராஜாங்க செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வால், யாழ் ஆயரை சந்தித்தார்.
இதன்போது கருத்து வெளியிட்ட ஆயர், இலங்கையின் போர் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பில் நேற்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அந்த கட்சியின் மத்திய குழு உறுப்பினரான பஸ்ஸரமுல்லே தயாவங்ஸ தேரர் இதனை குறிப்பிட்டார்.
தோமஸ் சௌந்தரநாயகத்தின் இந்த கருத்தானது சர்வதேசத்தில் எஞ்சியுள்ள புலம்பெயர் விடுதலைப்புலிகளுக்கு உதவுவதாக அமைந்துள்ளது எனவும் அவர் கூறினார்.
இலங்கைக்கு அண்மையில் விஜயம் செய்த அமெரிக்க உதவி ராஜாங்க செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வால், யாழ் ஆயரை சந்தித்தார்.
இதன்போது கருத்து வெளியிட்ட ஆயர், இலங்கையின் போர் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
யாழ். ஆயரின் கருத்துக்கு இலங்கை கத்தோலிக்க திருச்சபை பொறுப்பேற்க வேண்டும்
Reviewed by Author
on
February 04, 2014
Rating:

No comments:
Post a Comment