அண்மைய செய்திகள்

recent
-

ஊடகவியலாளர் கொலை: ஆசிய மனித உரிமை ஆணைக்குழு கண்டனம்

ஊடகவியலாளர் மெல் குணசேகரவின் கொலைக்கு ஆசிய மனித உரிமை ஆணைக்குழு கண்டனம் வெளியிட்டுள்ளது. வீட்டிலிருந்த போது மெல் படுகொலை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையில் திட்டமிட்ட படுகொலைச் சம்பவங்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது.


நாட்டின் பல பகுதிகளிலும் இவ்வாறான குற்றச் செயல்கள் பதிவாகின்றன. கொலை செய்வதில் நிபுணத்துவம் பெற்றவர்கள் இருக்கின்றனர். எதிரிகள் இவ்வாறானவர்களைப் பயன்படுத்தி இலகுவாக படுகொலைகளைச் செய்ய முடியும். போரின் காரணமாகவே இவ்வாறான கொலையாளிகள் உருவாகியுள்ளனர்.

 இவ்வாறான குற்றச் செயல்கள் தொடர்பில் அரசாங்கம் உரிய விசாரணை நடாத்தி குற்றவாளிகைள தண்டிப்பதில்லை. இவ்வாறான குற்றச் செயல்கள் இடம்பெற்றால் அது அரசாங்கத்தின் ஆதரவுடன் இடம்பெறுகின்றது என்றே மக்கள் கருதுகின்றனர். 

 இது சரியா, தவறா என்பதனை விடவும் இவ்வாறான குற்றச் செயல்கள் இடம்பெறுவதனை தடுத்து நிறுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமானது. நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலைமைகளை சீர்செய்ய அரசாங்கம் கூடுதல் முனைப்பு காட்ட வேண்டுமென ஆசிய மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஊடகவியலாளர் கொலை: ஆசிய மனித உரிமை ஆணைக்குழு கண்டனம் Reviewed by NEWMANNAR on February 04, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.