பேயோட்டுவதாக மாணவியை எரித்த ஆசிரிய ஆலோசகர் பணி நீக்கம்
பேய் விரட்டுவதாகக் கூறி 17 வயது மாணவியொருவரின் கால்களில் எரிகாயங்களை ஏற்படுத்திய ஆசிரிய ஆலோசகர் ஒருவர் வலயக் கல்விப் பணிப்பாளரினால் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் ஹொரவப்பொத்தானை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ரஞ்சனி குமாரி என்ற மாணவி, கொழும்பு நவலோகா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பேயோட்டியாகத் தோன்றிய ஆசிரியர் ஆலோசகரான தர்மசிறி ஜயலத்கே என்பவரே மேற்படி சம்பவத்தை அடுத்து பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு அமைச்சர் ஜொன்டன் பெர்ணான்டோ மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.
இவ்விருவரின் அறிவுறுத்தலுக்கமையவே மாணவி, கொழும்பு நவலோகா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பேயோட்டுவதாக மாணவியை எரித்த ஆசிரிய ஆலோசகர் பணி நீக்கம்
Reviewed by NEWMANNAR
on
February 28, 2014
Rating:
.jpg)
No comments:
Post a Comment