தாய்லாந்தில் இரண்டு தட்டு பஸ் விபத்து: 13 மாணவர்கள் உட்பட 15 பேர் பலி
கிழக்கு தாய்லாந்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பஸ் விபத்தொன்றில் குறைந்தது 13 சிறுவர்கள் இரு ஆசிரியர்கள் உட்பட 15 பேர் பலியானதுடன் 30 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
பாங்கொக்கின் தென்கிழக்கே சுமார் 150 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள கடற்கரை நகரான பட்டயாவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
வட கிழக்கு நகரான ரட்சஸிமாவிலுள்ள பாடசாலை ஒன்றைச் சேர்ந்த மாணவர்களும் ஆசிரியர்களும் பட்டயா நகருக்கு இரண்டு தட்டு பஸ் ஒன்றில் சுற்றுலாப் பயணத்தை மேற்கொண்டிருந்த வேளையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் இந்த விபத்துக்கான காரணத்தை கண்டறிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்
தாய்லாந்தில் இரண்டு தட்டு பஸ் விபத்து: 13 மாணவர்கள் உட்பட 15 பேர் பலி
Reviewed by NEWMANNAR
on
February 28, 2014
Rating:

No comments:
Post a Comment