கிளிநொச்சி நகர வர்த்தக நிலையங்கள் சுகாதாரப் பகுதியினால் உரிய முறையில் கண்காணிக்க மக்கள் வேண்டுகோள்.
கிளிநொச்சி நகரப் பகுதயில் உள்ள வர்த்தக நிலையங்கள் சுகாதாரப் பகுதியினால் உரிய முறையில் காலத்திற்கு காலம் கண்காணிக்கப்படாத நிலைமை காணப்படுவதாக பொது மக்களும் ஏனையவர்களும் தெரிவிக்கின்றார்கள் .
கடந்த மூன்று நாட்களாக திடீரென சுகாதார அமைச்சின் பணிப்புரைக்கு அமைவாக உணவகங்கள் தேனீர் கடைகளை பரிசோதனை செய்ய சென்ற போது சுகாதார பரிசோதகர்கள் மீது உணவங்களின் உரிமையாளர்கள் முரண்பட்டுக் கொண்ட நிலமையும கூட காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது .
குறிப்பிட்ட உணவகங்கள் ஏறகனவே தரம் பிரித்தமைக்கு அமைவாக ''ஏ'' தர உணவகங்கள் இரண்டு மாதத்திறக்கு ஒரு தடவை கண்காணிக்கப்பட வேண்டும் '' பி '' தர உணவகங்கள் ஒவ்வொரு மாதமும் கண்காணிக்கப்பட வேண்டும் ''சி ''தர உணவகங்கள் இரண்டு வாரத்திற்க்கு ஒரு தடவை கண்காணிக்கப்பட்டு வரவேண்டும் என்பது சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலாகும் .
இத்தகைய செயல்பாடுகள் எவையும் மேற் கொள்ளப்படாமலும் எந்த வகையான தரவுகள் சேகரிக்கும் படிவங்கள் வழங்கப்படாத நிலையில் உணவங்கள்மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் உணவகங்களின் உரிமையாளர்கள் கவலையுடன் தெரிவிக்கின்றார்கள் .
எதிர் காலத்திலேனும் ஏனைய பிரதேசங்களில் பின்பற்றப்படும் நடைமுறைகளை கிளிநொச்சி நகரப் பகுதிகளிலும் மேற்கொள்வார்களாக சுகாதார திணைக்களத்தினர் என பாதிக்கப்பட்டவர்களும் ஏனையவர்களும் ஏதிர் பார்க்கின்றார்கள் .
கிளிநொச்சி நகர வர்த்தக நிலையங்கள் சுகாதாரப் பகுதியினால் உரிய முறையில் கண்காணிக்க மக்கள் வேண்டுகோள்.
Reviewed by NEWMANNAR
on
February 02, 2014
Rating:
.jpg)
No comments:
Post a Comment