சிவராத்திரி தினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட சமய அறிவுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி வைப்பு - படங்கள்
மன்னார் திருக்கேதீஸ்வரம் மகா சிவராத்திரி மட பரிபாலன சபை நடாத்தியிருந்த சிவராத்திரி தின சமய அறிவுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும்,சான்றுதல்களும் வழங்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை காலை 10 மணியளவில் திருக்கேதீஸ்வர சிவராத்திரி மடத்தில் இடம் பெற்றது.
இதன் போது குறித்த போட்டிகளில் 1 ஆம்,2 ஆம் 3 ஆம் இடத்தைப்பொற்ற மாணவர்களுக்கு சிவராத்திரி தினமான இன்று பரிசில்களும்,சான்றுதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
குறித்த நிகழ்வில் மகா சிவராத்திரி மடத்தின் தலைவர் த.நடராஜா,செயலாளர் எஸ்.சன்முக லிங்கம் மற்றும் மகா சிவராத்திரி மடத்தின் நிர்வாக குழு உறுப்பினர்கள்,போசகர்கள் ஆகியோர் கலந்து கொண்டு பரிசில்களை வழங்கி வைத்தனர்.
சிவராத்திரி தினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட சமய அறிவுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி வைப்பு - படங்கள்
Reviewed by NEWMANNAR
on
February 27, 2014
Rating:

No comments:
Post a Comment