யாழ்.பல்கலைக்கழக மாணவி பாம்பு தீண்டி உயிரிழப்பு
மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகிழூர் கிராமத்தில் பல்கலைக்கழக மாணவியொருவர் பாம்பு தீண்டி உயிரிழந்துள்ளார்.
யாழ். பல்கலைக்கழகத்தில் முதலாம் வருடத்தில் கல்வி பயின்று வந்த கங்காதரன் மாதுமி (வயது 22) என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பாம்புக்கடிக்குள்ளான குறித்த மாணவி, களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக வைத்திய அத்தியட்சகர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்தார்.
இவரின் சடலம் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
யாழ்.பல்கலைக்கழக மாணவி பாம்பு தீண்டி உயிரிழப்பு
Reviewed by NEWMANNAR
on
February 27, 2014
Rating:

No comments:
Post a Comment