அண்மைய செய்திகள்

recent
-

இலங்கையில் ஆண்களே அதிகளவில் தற்கொலை செய்கின்றனர்; ஆய்வில் தகவல்

இலங்கையில் தற்கொலை செய்துகொள்பவர்களில் 80 வீதமானவர்கள் ஆண்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கடந்த வருடத்தில் மாத்திரம் நாட்டில் 3,461 தற்கொலைகள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

இவர்களில் 400 பெண்களும், 3000 ஆண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, 15 தொடக்கம் 25 வயதிற்குட்பட்டவர்கள் தற்கொலை செய்துகொள்வது அதிகரித்துள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மானிடவியல் மற்றும் சமூக விஞ்ஞான பீடத்தின் பேராசிரியர் குணதாஸ பெரேரா தெரிவிக்கின்றார்.

ஏற்றுக்கொள்ளும் இயல்பின்மையே தற்கொலைக்கான முக்கிய காரணமாக அமைந்துள்ளதென தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த காலங்களில் வறுமை, குடும்ப பிரச்சினை என்பன தற்கொலைக்கான காரணமாக காணப்பட்டபோதிலும், தற்போது மன அழுத்தம், பெற்றோரின் கவனயீனம், ஆசிரியர்களின் செயற்பாடுகள் காரணமாகவும் தற்கொலைகள் பதிவாகுதாக பேராசிரியர் குணதாஸ பெரேரா கூறினார்.
இலங்கையில் ஆண்களே அதிகளவில் தற்கொலை செய்கின்றனர்; ஆய்வில் தகவல் Reviewed by NEWMANNAR on March 11, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.