அண்மைய செய்திகள்

recent
-

முல்லைத்தீவு நட்டாங்கண்டல் கிராம அபிவிருத்திக்கு 25 மில்லியன் பெறுமதியான கனரக வாகனம் கையளிப்பு. - படங்கள்

  
கடந்த 25ம் திகதி முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்திட்குட்பட்ட நட்டாங் கண்டல் கிராமத்தில் பொது சந்தை கட்டிடம் திறப்பும் அந்த பிரதேச சபைக்கான பாதைகளை துப்பரவு செய்வதற்கான கனரக வாகனங்களும் கையளிக்கும் நிகழ்வு இடம் பெற்றது.

இதில் வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஐயா, வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அப்பிரதேசத்திற்கான அபிவிருத்திக் குழுத் தலைவருமான சட்டத்தரணி ஹுனைஸ் பாரூக், வட மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபை உருப்பினர்கள், பிரதேச செயலாளர், ஊர் 
தலைவர் மார்கள், திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் 
பலரும் கலந்து கொண்டனர்.

மேற்படி இந்நிகழ்வில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக்

இக்கட்டிடத் தொகுதிக்கு பொருளாதார அமைச்சின் ஊடாக ஸ்கொலசிப் திட்டத்தின் மூலம் 97இலட்சம் ரூபாய்கள் செலவழிக்கப் பட்டதாகவும் மேலும் இப்பிரதேசத்தில் பாதைகள், காடுகள் துப்பரவு செய்ய வேண்டிய தேவை இருப்பதால் பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் மக்களால் முன்வைக்கப் பட்ட கோரிக்கைக்கு அமைய சுமார் 25மில்லியன் பெருமதியான வாகனங்களை பிரதேச சபைக்கு இன்று கையயளிக்கின்றோம் என்றும் குறிப்பிட்டார்.

மேலும் உரையாற்றுகையில் நல்லிணக்கம் என்பது இன பேதங்கள், கட்சி பேதங்களுக்கு அப்பால் மக்களின் தேவை பிரதேசத்தின் அபிவிருத்தி என்பவற்றை கருத்திற் கொண்டு செயற்பட வேண்டும். ஆனால் வடக்கில் உள்ள தமிழ் கூட்டமைபின் அரசியல் வாதிகள் பலர் இதற்கு மாற்றமாக தமது அரசியல் இருக்கைகளை தக்கவைத்துக் கொள்வதற்காக இன வாதம், மத வாதம் பேசி மக்களை ஒருமாயைக்குள் வைக்க முனைகின்றனர். இதன் மூலம் அரசியல் வாதிகள் இலாபம் அடையலாமே தவிர முப்பது வருட யுத்தத்தில் அழிவுற்றிருக்கும் வட பகுதியையோ, அப்பகுதி மக்களின் வாழ்க்கைத்தரத்தையோ அபிவித்தி செய்ய முடியாது என்றும் இந்த வகையில் வட மாகாணத்திற்கு தலைமை தாங்கும் முதலமைச்சர் வடக்கில் வாழும் இனங்களை ஒன்றினைத்து, அரவணைத்து செல்லும் வகையில் செயற்படுகின்றாரென்றும் குறிப்பிட்ட பாராளுமன்ற உருப்பினர் இத்தலைமைத்துவ வழி காட்டல் இக்கட்சியின் ஏனைய உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் எனவும் சுட்டிக் காட்டினார்.

மேலும் தனதுரையில் வடபுலத்தை மீளக்கட்டியெழுப்ப வேண்டும், வடபுலத்தில் வசந்தத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதை பாராளுமன்ற உறுப்பினர்கள் முதல் பிரதேச சபை உறுப்பினர்கள் வரை உணர்ந்து செயற்படும் போதுதான் இலங்கையின் ஏனைய மாவட்டங்களைப் போல் வட பகுதியையும் அபிவிருத்தியடையச் செய்யலாம் என்றும் குறிப்பிட்டார்.

S.H.M.வாஜித்







முல்லைத்தீவு நட்டாங்கண்டல் கிராம அபிவிருத்திக்கு 25 மில்லியன் பெறுமதியான கனரக வாகனம் கையளிப்பு. - படங்கள் Reviewed by NEWMANNAR on March 01, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.