அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் குழந்தை இயேசுபுரம் பகுதியில் தொடர் திருட்டு சம்பவங்கள் அதிகரிப்பு

மன்னார் குழந்தை யேசுபுரம் பகுதியில் சமீப காலமாக திருடர்கள் தமது கைவரியையினை காட்டி வருகின்றனர். குறித்த கொள்ளையர்கள் செயற்ப்பாட்டால் குழந்தை யேசுபுரம் மக்களில் பலர் பாதிக்கப்பட்டு
வருகின்றனர்


குறிப்பாக குழந்தை யேசுபுரம் வீதியில் அமைந்துள்ள மன்னார் மாவட்டத்தின் அரச உயர் அதிகாரி  ஒருவரின் வீட்டில் கடந்த மாதம் அளவில் குறித்தகொள்ளையர்கள் தமது கைவரிசையினை காட்டியிருந்தனர்.

குறித்த அரச உயர் அதிகாயின் வீட்டில் எவரும் இல்லாத வேளையில் கடந்த மாதம் அளவில் இரவு நேரத்தில் குறித்த வீட்டிற்குள் திருட்டுத்தனமாக சென்ற குறித்த கொள்ளையர்கள் வீட்டிலிருந்த உயர்தர கைதொலைபேசி உட்பட பல பெறுமதி மிக்கப் பொருட்களை கொள்ளையிட்டு சென்றுள்ள சம்பவம் ஒன்று  இடம் பெற்றுள்ளது.


எனினும் இது குறித்து பாதிக்கப்பட்ட அதிகாரி பொலிசில் முறையிடவில்லை என தெரியவருகிறது.

இந்நிலையில் குறித்த கொள்ளையர்கள் குறித்த பகுதியில் தொடர்சியாக கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக ஒருசில தினங்களுக்கு முன்பு
 இரவு இதை போன்ற கொள்ளை சம்பவம் ஒன்று இப்பகுதியில் நடைபெற்றுள்ளது. கடந்த மாதம்  ஏற்கனவே கொள்ளையிடப்பட்ட அதிகாரியின் வீட்டிற்கு மிக அண்மையிலுள்ள வீடு ஒன்றிலேயே குறித்த கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது.
இதன் மூலம் குறித்த கொள்ளையர்கள் குறித்த பகுதியிலேயே இருப்பதாக இப்பகுதி மக்கள் சந்தேகிக்கின்றனர்.

குறிப்பாக குறித்த கொள்ளை சம்பவம் இடம் பெற்ற வீடுகளுக்கு அண்மையில் அமைந்திருக்கும் வீடு ஒன்றில் இரவு வேளைகளில் இளைஞர்களின் நடமாட்டம் அதிகம் காணப்படுகிறது.

குறிப்பாக இரவுவேளைகளில் குறித்த வீட்டில் கூடும் 10த்திற்கும் மேற்ப்பட்ட இளைஞர்கள் குறித்த வீட்டின் முன்புறமாக வீட்டிற்கு வெளியிலிருக்கும் கொங்கிறிற் பாதையில் கதிரைகள் போட்டு குறித்த வீட்டின் மின்சார இணைப்பினை ஏற்படுத்தியும் வீதியில் கரம் விளையாட்டுகளை விளையாடி வருகின்றனர்

இரவில் சுமார் 11மணிமுதல் முதல் 12  மணிவரை குறித்த இளைஞர்கள் குறித்த பகுதியில்  நடமாடிவருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு இவர்கள் குறித்த பகுதியிலிருக்கும்போதே இவ் இளைஞர்கள் இருக்கும் இடத்திற்கு மிக அருகாமையிலேயே குறித்த கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்ச்;சியாக இப்பகுதியில் நடைபெற்று வரும் கொள்ளை சம்பவங்களை அடுத்து குறித்த இளைஞர்களோ குறித்த  பகுதியில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுவருவதாக குறித்த பகுதியில் வசிக்கும் மக்கள் சந்தேகம் ஏற்ப்பட்டுள்ளது.

குறிப்பாக இப்பகுதியில் ஒரு குழு கரம்விளையாட்டில் ஈடுபடும் பொழுது இன்னுமொரு குழு இப்பகுதியிலுள்ள வீடுகளில் நோட்ட மிடுவதும்  பின் கொள்ளை சம்பவங்கள் ஈடுபடுவதாக சந்தேகிக்கப்படுகிறது.
குறித்த குழுவிற்கு தரகு தொழிலில் ஈடுபட்டு வரும் நபர் ஒருவருக்கும்  நெருங்கிய தொடர்புகள் உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

எனினும் குறித்த சம்பவம் தொடர்கதையாக மாறாமல் குறித்த பகுதியில்  மீண்டும் இவ்வாறான கொள்ளை சம்பவங்கள் நடைபெறாமலிருக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்
எனவே குறித்த விடயம் தொடர்பாக பொலிசார் சம்பந்தப்பட்ட உண்மையான கொள்ளையர்களை சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்


மன்னார் குழந்தை இயேசுபுரம் பகுதியில் தொடர் திருட்டு சம்பவங்கள் அதிகரிப்பு Reviewed by Author on February 28, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.