சிறுவனின் முகத்தில் சூடு வைத்த பாட்டிக்கு அபராதம்
திம்புள்ள, பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மவுண்ட்வேர்ணன் பகுதியில் சிறுவனின் முகத்தில் சூடு வைத்த பாட்டிக்கு அட்டன் நீதிமன்றம் 10ஆயிரம் ரூபா அபராதம் விதித்துள்ளது.
மவுண்ட்வேர்ணன் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் விக்னேஷ்வரன் என்ற சிறுவனுக்கே சிறுவனின் பாட்டி முகத்திலும், கால்களிலும் சூடு வைத்துள்ளார்.
குறித்த சிறுவனின் தந்தை, தாய் இருவரும் வெளிநாட்டில் பணிப்புரிவதால் பாட்டியின் பாதுகாப்பிலேயே குறித்த சிறுவன் இருந்துள்ளான்.
இந்நிலையில் குறித்த சிறுவன் பாடசாலைகளில் சில பொருட்களை திருடுவதனால் தான் பாட்டி விறகுகட்டையால் சூடு வைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து பாட்டியை கைது செய்து அட்டன் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சிறுவனின் முகத்தில் சூடு வைத்த பாட்டிக்கு அபராதம்
Reviewed by NEWMANNAR
on
March 08, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
March 08, 2014
Rating:


No comments:
Post a Comment