இறந்தவர் நீதவான் முன் தோன்றியதால் மன்னார் நீதி மன்றத்தில் பரபரப்பு
மன்னார் தலைமன்னார் பிரதான வீதியில் மன்னார் விசேட அதிரடிப்படை முகாமுக்கு அண்மையில் வயோதிபத் தம்பதியினர் வசித்து வருகின்றனர்.
மிகவும் வறியவர்களான அவர்கள் நோயுற்ற நிலையில் நடப்பதற்கு இயலாத நிலையில் உள்ளனர்.
கடந்த வாரம் குறித்த தம்பதியினரில் மனைவி கடும் சுகவீனமுற்றார். சுகவீனமுற்ற நிலையில் மூன்று நாட்களாக படுத்த படுக்கையாகவே இருந்துள்ளார்.
மூன்றாம் நாள் வயோதிபக் கணவன் மனைவியை தட்டி எழுப்பியுள்ளார்.
மனைவி பேச்சு மூச்சின்றி இருக்கவே அழுதவாறு அயலவர்களின் உதவியுடனும் ஆலோசனையை பெற்று மன்னார் பொலிஸ் நிலையத்திற்கு வந்து சம்பவத்தை விபரித்துள்ளார்.
மன்னார் பொலிசாரும் உடனடியாகவே சம்பவ இடத்திற்குச் சென்றனர்.
அறிக்கையினை தயார் செய்து நீதிவானிடம் சென்று மரண விசாரணைக்கும் பிரேத பரிசோதனைக்குமான கட்டளை பெற்று சம்ப விடத்திற்கு பதில் நீதிவானுடன் விரைந்துள்ளனர்.
பதில் நீதிவான் சம்பவ இடத்திற்கு சென்று சடலம் எங்கே எனக் கேட்ட போது இறந்ததாக கருதப்பட்ட மனைவி உயிருடன் எழுந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் மறுநாள் பொலிசாருக்கு பொய் முறைப்பாடு கொடுத்த குற்றச்சாட்டில் கணவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
வழக்கினை விசாரித்த மன்னார் நீதவான் நடக்க இயலாமல் இருக்கும் வயோதிபர் பொலிசாருக்கு பொய் முறைப்பாடு கொடுக்க வேண்டிய அவசியம் இருப்பதாக கருதவில்லை எனக் கூறி அவரை விடுவித்ததுடன், சரியான விபரங்களை அறியாமல், விசாரணை செய்யாமல் வழக்கினைத் தொடுத்த பொலிசாரை எச்சரிக்கை செய்ததுடன் எதிர்காலத்தில் இவ்வாறு நடக்க வேண்டாம் எனவும் அறிவுறித்தினார்.
இறந்தவர் நீதவான் முன் தோன்றியதால் மன்னார் நீதி மன்றத்தில் பரபரப்பு
Reviewed by NEWMANNAR
on
March 29, 2014
Rating:
(1).jpg)
No comments:
Post a Comment