இந்திய விமான விபத்தில் ஐவர் பலி
இந்திய விமான படைக்கு சொந்தமான சி.130.ஜே ரக விமானம் குவாலியா பிரதேசத்தில் வைத்து நேற்று விபத்துக்குள்ளானதில் ஐவர் கொல்லப்பட்டுள்ளனர்.
பலியானவர்களில் நால்வர் விமான படையைச் சேர்ந்த அதிகாரிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உரிய அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக இந்திய ஊடகங்கள்செய்தி வெளியிட்டுள்ளது.
விபத்திற்கு உள்ளான விமானம் நான்கு வருடங்களுக்கு முன் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டமை குயிப்பிடத்தக்கதாகும்.
இந்திய விமான விபத்தில் ஐவர் பலி
Reviewed by NEWMANNAR
on
March 29, 2014
Rating:

No comments:
Post a Comment