அண்மைய செய்திகள்

recent
-

இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்காமை ஏமாற்றமளிக்கிறது – மேரி ஹாப்-காணொளி இணைப்பு

மனித உரிமைள் பேரவையில் கொண்டுவரப்பட்ட இலங்கை தொடர்பான பிரேரணைக்கு இந்தியா வாக்களிக்காத போதிலும், நடுநிலை வகித்தமை ஏமாற்றமளிப்பதாக,  அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற நாளாந்த செய்தியாளர் சந்திப்பில் திணைக்களத்தின் பிரதிப் பேச்சாளர் மேரி ஹாப் தெரிவித்துள்ளார்.-

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள  2002 தொடக்கம் 2009 ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் வன்முறைகள் தொடர்பான விரிவாக விசாரணையொன்றை மனித உரிமைக் பேரவையின் ஆணையாளர் அலுவலகத்தினால் முன்னெடுக்குமாறு முதற்தடவையாக இந்த பிரேணை ஊடாக வலியுறுத்தப்பட்டுள்ளது. கடந்த இரண்டு வருடங்கள் பிரேரணைக்கு ஆதரவளித்து இந்தியா வாக்களித்திருந்த போதிலும், இம்முறை நடுநிலைமை வகித்தமை எமக்கு ஏமாற்றமளிக்கின்றது. எமது அதிருப்தியை இந்திய அதிகாரிகளிடம் வெளிப்படுத்தியிருந்தோம். அதற்கும் மேலாக, எந்த அடிப்படையில் அவர்கள் வாக்களித்தார்கள்? என்பதை தெரிந்து கொள்ள விரும்புகின்றோம்.

இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்காமை ஏமாற்றமளிக்கிறது – மேரி ஹாப்-காணொளி இணைப்பு Reviewed by NEWMANNAR on March 30, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.