விமானத்தை தேடிவரும் கப்பல்கள் நீரில் இருந்து பொருட்களை எடுத்தன -காணொளி
காணாமல்போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் சிதிலங்கள் கண்ணில் பட்டதாக தேடுதலில் ஈடுபட்ட விமானங்கள் கூறியதை அடுத்து அவை குறிப்பிட்ட கடல் பகுதிக்கு சென்றிருந்த சீன மற்றும் ஆஸ்திரேலியக் கப்பல்கள் முதல் தடவையாக தற்போது பல பொருட்களை நீரில் இருந்து எடுத்துள்ளன.
சீனக் கப்பல்கள் வலையைப் பயன்படுத்தி பொருட்களை தண்ணீரில் இருந்து அள்ளுவதை தொலைக்காட்சிப் படங்கள் காட்டியுள்ளன.
ஆனால் அவையெல்லாம் விமானத்திலிருந்து வந்திருக்கக்கூடிய பொருட்கள் அல்ல என்று தெளிவாகத் தெரிந்தது.
கண்டெடுக்கப்பட்ட பொருளில் எதுவுமே காணாமல்போன MH370 விமானத்துடன் தொடர்புடையது என்று இதுவரை உறுதிசெய்யப்படவில்லை.
சனிக்கிழமைக்கான தேடுதல் பணிகள் நிறைவடைந்துவிட்டன என்றாலும், தேடுதல் நடக்கும் பகுதியில் வேறுசில பொருட்கள் மிதப்பதையும் சீன மற்றும் ஆஸ்திரேலிய விமானப்படை விமானங்கள் கண்டதாக ஆஸ்திரேலிய கடல் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.
விமானத்தை தேடிவரும் கப்பல்கள் நீரில் இருந்து பொருட்களை எடுத்தன -காணொளி
Reviewed by NEWMANNAR
on
March 30, 2014
Rating:

No comments:
Post a Comment