பேசாலையில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இருவரையும் தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு
மன்னார் பேசாலை பகுதியில் ஹேரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களையும் தலைமன்னார் பொலிஸார் நேற்று திங்கட்கிழமை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போது குறித்த இரண்டு சந்தேக நபர்களையும் பொலிஸ் தடுப்பில் வைத்து விசாரனைகளை மேற்கொள்ள மன்னார் நீதவான் ஆனந்தி கனரட்ணம் நேற்று (3) உத்தரவிட்டார்.
மீண்டும் குறித்த சந்தேக நபர்களை எதிர்வரும் 8 ஆம் திகதி மன்றில் ஆஜர்படுத்துமாறு நீதவான் தலைமன்னார் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
பேசாலை பகுதியியை சேர்ந்த இரு சந்தேகநபர்கலே நேற்று முந்தினம் (2) போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டு தலைமன்னார் பொலிசாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
பேசாலை யூட் வீதியில் வைத்து ஒருவர் ஹேரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார்.பின் இவரிடம் விசாரனைகளை மேற்கொண்ட போது முச்சக்கர வண்டியில் வைத்து மேலும் ஒருவரிடம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் போசாலை 8 ஆம் வட்டாரத்தை சேர்ந்தவர் என்றும் இவர் 13 கிராம் 600 மில்லிகிராம் ஹெரோயின் போதைபொருள் வைத்திருந்ததாகவும், மற்றவர் பேசாலை முருகன் கோவில் பகுதியை சேர்ந்தவர் எனவும் இவரிடமிருந்து 210 மில்லிகிராம் போதைபொருள் கைப்பற்றப்பட்டதாகவும் தலைமன்னார் பொலிசார் தெரிவித்தனர்.
-தற்போது குறித்த இருவரையும் நீதிமன்றத்தின் உத்தரவிற்கமைவாக தலைமன்னார் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப்பிரிவு பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பேசாலையில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இருவரையும் தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு
Reviewed by NEWMANNAR
on
March 04, 2014
Rating:

No comments:
Post a Comment