அம்பாறையில் 2,000 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு
அம்பாறையில் 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வரலாறு மற்றும் தொல்பொருள் கற்கை பிரிவு மாணவர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் உள்ள கற்குகை ஒன்றிலிருந்து இந்த கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டதாக பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் பிரிவு பேராசிரியர் கருனாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
இந்த கல்வெட்டு, சுமார் இரண்டாயிரம் ஆண்டுக்கு முற்பட்ட காலப்பகுதியில் ‘பிறாக்மி’ எழுத்துக்களால் உருவாக்கப்பட்ட ஒன்று எனவும் பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
அம்பாறையில் 2,000 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு
Reviewed by NEWMANNAR
on
March 05, 2014
Rating:

No comments:
Post a Comment